For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2008ல இந்தியா ஜெர்சியை முதல்ல போட்டாரு... அப்புறமா நடந்ததெல்லாம் வரலாறு.. பிசிசிஐ பாராட்டு

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் தனது 12 வருடங்களை கேப்டன் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து பிசிசிஐ மற்றும் ஆர்சிபி அணி டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி இலங்கைக்கு எதிராக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியை ஆடினார் கேப்டன் விராட் கோலி.

அந்தப் போட்டியில் சொற்ப ரன்களையே அவர் எடுத்தார் என்றாலும், அதன்பின்பு அவரது சாதனைகள் எல்லாம் வரலாறாக மாறியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி முதலிடம்

இந்திய அணி முதலிடம்

கேப்டன் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்துவதிலும் தன்னுடைய ஆட்டங்களை சிறப்பாக விளையாடுவதிலும் மிகவும் திறமை மிக்கவராக விளங்குகிறார். அவரது கேப்டன்ஷிப்பின்கீழ் இந்திய அணி ஐசிசியின் முக்கிய கோப்பைகளை கைகொள்ளவில்லை என்ற குறை இருந்த போதிலும் டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு வந்தவர் என்ற பெருமை கோலிக்கு உள்ளது.

12 வருடங்கள் பூர்த்தி

12 வருடங்கள் பூர்த்தி

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய 12 வருடங்களை இன்றுடன் பூர்த்தி செய்துள்ளார். கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டத்தில் பங்கேற்று விளையாடினார் விராட் கோலி. அந்த போட்டியில் அவர் 12 ரன்களையே எடுத்தார். இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி கண்டது.

பிசிசிஐ பாராட்டு

பிசிசிஐ பாராட்டு

ஆனால் அடுத்தடுத்த தன்னுடைய ஆட்டத்தின்மூலம் சர்வதேச அளவில் சிறப்பான வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் கோலி. கடந்த 2011 உலக கோப்பை வெற்றி மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி ஆகியவற்றில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 12 வருடங்களை பூர்த்தி செய்ததற்கு பிசிசிஐ தனது பாராட்டுக்களை டிவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளது.

நடந்ததெல்லாம் வரலாறு

நடந்ததெல்லாம் வரலாறு

கடந்த 2008ல் இதேநாளில் இந்திய அணிக்காக ப்ளூ ஜெர்சியை அணிந்து அவர் தனது பயணத்தை துவங்கியதாகவும் அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு என்றும் கூறியுள்ளது. அவர் தன்னுடைய 12 வருடங்களை பூர்த்தி செய்ததற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளது. இதேபோல ஐபிஎல்லில் விராட் கேப்டனாக உள்ள ஆர்சிபி அணியும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்சிபி பாராட்டு

ஆர்சிபி பாராட்டு

கடந்த 2008ல் தன்னுடைய சர்வதேச பயணத்தை விராட் கோலி துவக்கியதாகவும் இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் முதல் முறையாக விளையாடியதாகவும் ஆர்சிபி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சாதனைகளை இலக்காக கொண்ட விராட் கோலி கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர் என்றும் கூறியுள்ளது.

Story first published: Tuesday, August 18, 2020, 19:57 [IST]
Other articles published on Aug 18, 2020
English summary
BCCI and RCB posted on social media to congratulate Kohli on the feat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+