Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டீவ் ஸ்மித்த ரன்-அவுட் செஞ்சது சூப்பர்... கொலமாசு சம்பவம்... ஜடேஜா மகிழ்ச்சி

சிட்னி : இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்த நிலையில், அவரை ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்திருந்தார்.

இந்த ரன் அவுட்டுடன் மேலும் 4 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இன்னிங்சில் பெற்றுள்ளார் ஜடேஜா.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட் செய்தது தன்னுடைய கேரியரில் சிறப்பான தருணம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

337 ரன்களுக்கு ஆஸி. ஆல்-அவுட்

337 ரன்களுக்கு ஆஸி. ஆல்-அவுட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் சிட்னியில் நடைபெற்றுவரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துள்ளது. அடுத்து ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்களை அடித்து 2வது நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட்

ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட்

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியினரின் அடுத்தடுத்த 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியில் சதமடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டையும் ரன் அவுட் மூலம் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தின் ரன் அவுட் குறித்து ஜடேஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா மகிழ்ச்சி

ஜடேஜா மகிழ்ச்சி

கடந்த இரு போட்டிகளில் சேர்த்து 10 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியில் சேர்த்துவைத்து 131 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் அவரை ரன் அவுட்டாக்கியிருந்தார் ஜடேஜா. இதையடுத்து அவரை அவுட் செய்தது தன்னுடைய கேரியரில் சிறப்பான தருணம் என்று ஜடேஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்கு சிறப்பானது

எதிர்காலத்திற்கு சிறப்பானது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுப்மன் கில் தொழில்நுட்ப ரீதியாக குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 8, 2021, 19:11 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+