Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சூதாட்டம்.. இந்திய புக்கிகளுக்கு தொடர்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ

கான்பெரா: உலக கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போடும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நடுவேயான ஆஷஸ் டெட்ஸ் தொடரில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இந்திய புக்கிகளுக்குதான் முக்கிய தொடர்புள்ளதாக 'தி சன்' ஆங்கில டேப்ளாய்ட் வெளியிட்டுள்ள செய்தி கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது.

ஆங்கில பத்திரிகை நிருபர்குழு, புக்கிகளுடன் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாஸ் முதல் பேட்டிங் வரை

டாஸ் முதல் பேட்டிங் வரை

டாஸ் வென்றதும், பேட்டிங்கா, பந்து வீச்சா என்பதை தேர்ந்தெடுப்பதில் இருந்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வளவு ரன் சேகரிக்க வேண்டும், ஒரு ஓவரில் எவ்வளவு ரன் எடுக்க வேண்டும், எப்போது அவுட்டாக வேண்டும் என்பது குறித்தெல்லாம் பிக்சிங் செய்யப்படுவதாக இந்த விசாரணையில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

ரகசிய வீடியோ

ரகசிய வீடியோ

ஒரு ஓவரில் இவ்வளவுதான் ரன் எடுக்க வேண்டும் என பிக்ஸ் செய்ய 187,000 டாலர் பணம் தர வேண்டும் என சூதாட்டக்காரர்கள், நிருபர்களிடம் கூறியுள்ள காட்சிகள் ஸ்டிங் ஆபரேசனில் இடம் பெற்றுள்ளன. போட்டிக்கு முன்பாக அந்த விவரங்களை சொல்வோம் என புக்கி கூறுகிறார்.

வீரர்கள் சிக்னல்

வீரர்கள் சிக்னல்

'தி சன்' ஊடகம் சார்பில் 4 மாதங்கள் முயன்று இந்த ரகசிய ஆபரேசன் நடத்தப்பட்டுள்ளது. துபாய் மற்றும் டெல்லி ஹோட்டல்களில் இந்த உரையாடல்கள் நடந்துள்ளன. பிக்சிங்கிற்கு சம்மதித்த கிரிக்கெட் வீரர் சில சமிக்ஞைகள் மூலம் அதை தெரிவிப்பார் என்று புக்கி சொல்லும் காட்சியும் அதில் உள்ளது. கை உறையை மாற்றுவது போன்றவை இதற்கான சிக்னல்களாம்.

ஆஷஸ் டெஸ்டில் சூதாட்டம்

ஆஷஸ் டெஸ்டில் சூதாட்டம்

ஆஷஸ் டெஸ்டில் ஒரு செஷனில் எவ்வளவு ரன் அடிக்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளதாகவும், அதற்கான பெட்டிங் தொகை ரூ.60 லட்சம் என்றும், அதுவே 2 செஷன்களுக்கு பெட் கட்டினால் ரூ.1 கோடியே 20 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், புக்கி கூறுவதை போல காட்சி உள்ளது. உங்களுக்கு சம்மதம் என்றால் 'சைலன்ட்மேன்' உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புக்கிகள் கூறுகிறார்கள். சைலன்ட்மேன் என்பவர் ஆஸி. அணி வீரர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தும் நபர் என கூறப்படுகிறது. இந்த உரையாடலில் பங்கேற்ற 2 இந்திய புக்கிகள் பெயர்கள் சோபர்ஸ் ஜோபன் மற்றும் பிரியங் சக்சேனா என தெரியவந்துள்ளது.

Story first published: Thursday, December 14, 2017, 13:51 [IST]
Other articles published on Dec 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+