Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் அவுட்டான விதம் ரொம்ப மோசமா உணர வச்சுது... உணர்ச்சிவசப்பட்ட சுப்மன் கில்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்சில் 45 ரன்களில் அவுட்டான துவக்க வீரர் சுப்மன் கில், தான் அவுட்டான விதம் தன்னை மிகவும் மோசமாக உணர செய்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 195 ரன்களை அடித்த நிலையில், அந்த ரன்களை இந்திய அணி 326 ரன்களை அடித்து கடந்துள்ளது.

ஆஸ்திரேலியா திணறல்

ஆஸ்திரேலியா திணறல்

தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறலுடன் விளையாடி வருகிறது. நேற்றைய முதல் இன்னிங்சில் விளையாடிய துவக்க வீரர் சுப்மன் கில், துவக்கத்தில் தடுமாறினாலும், தொடர்ந்து தனது நிதானமான ஆட்டத்தின்மூலம் 45 ரன்களை அடித்துள்ளார்.

அவுட் குறித்து சுப்மன் கில்

அவுட் குறித்து சுப்மன் கில்

இந்நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய அவுட் தன்னை மோசமாக உணர செய்ததாக சுப்மன் கில் குறிப்பிட்டுள்ளார். மைதானத்திற்கு விளையாட வந்தபோது பிட்ச் எப்படி இருந்தாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உறுதியுடன் தான் வந்ததாகவும் அதன்படி தன்னுடைய ஆட்டத்தை தான் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருப்தி அளிக்கவில்லை

திருப்தி அளிக்கவில்லை

ஆனால் தான் அவுட்டான விதம் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் கில் குறிப்பிட்டுள்ளார். அணியின் சிறப்பான பும்ரா, ஷமி, உமேஷ் உள்ளிட்ட பௌலர்களுடன் நெட் பயிற்சியில் ஈடுபட்டு தான் சிறப்பாக பயற்சி பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார். இவ்வாறு பயிற்சி பெறுவது பெரிய அளவிலான தன்னம்பிக்கையை ஒரு இளம் வீரருக்கு கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, December 28, 2020, 13:24 [IST]
Other articles published on Dec 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+