For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க 2 பேருமே வேண்டாம்.. களத்திலேயே உறுதியாக சொன்ன கோலி.. அசர வைக்கும் "களிமண்" வியூகம்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மிகவும் சிறப்பாக கேப்டன்சி செய்து வருகிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி மோசமாக ஆடி 112 ரன்னிற்கு அவுட் ஆனது.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணியும் 145 ரன்னுக்கு அவுட் ஆனது. பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தது.

விக்கெட்

விக்கெட்

இதனால் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சிறப்பாக பவுலிங் செய்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார் . வெறும் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை ஜோ ரூட் எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளது. பிட்சில் முழுக்க முழுக்க களிமண் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் இருக்கும் களிமண் காய்ந்து நன்றாக பந்து ஸ்விங் ஆகிறது. ஒவ்வொரு முறை பந்து படும்போதும் களிமண் தெறிப்பதை பார்க்க முடிகிறது.

பாஸ்ட்

பாஸ்ட்

இதை உணர்ந்துதான் கோலி போட்டியின் போதே மூன்று ஸ்பீட் பவுலர்களை எடுத்தார். அதோடு இன்று கோலியின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவுகிறது என்பதால் இரண்டாவது இன்னிங்சில் முதல் ஓவரையே அக்சர் பட்டேலுக்கு கோலி கொடுத்தார்.

ஸ்பீட்

ஸ்பீட்

புதிய பந்து என்பதால் ஸ்பீட் பவுலர்களுக்கு கொடுக்காமல் முதல் ஓவர் அக்சர், பின் அஸ்வின் என்று மாறி மாறி கோலி ஓவர் கொடுத்தார். இதுவரை இஷாந்த், பும்ரா ஆகிய இரண்டு பேரையும் கோலி பயன்படுத்தவில்லை. பாஸ்ட் பவுலர்களை பயன்படுத்த வேண்டாம் என்பதில் கோலி உறுதியாக உள்ளார். இதனால் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தது. அக்சர் பட்டேல் அடுத்தடுத்து 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

சிறப்பு

சிறப்பு

கோலி இந்த போட்டியில் கொடுத்து வரும் ஓவர் ரொட்டேஷன் மிகவும் சிறப்பாக உள்ளது. ஸ்பின் பவுலர்களை கோலி மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். ஆனால் இதே பிட்சில்தான் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 25, 2021, 23:33 [IST]
Other articles published on Feb 25, 2021
English summary
The way Kohli using spin bowlers is very good in the 3rd test against England today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+