Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உரித்துப் பார்க்கும் ரசிகர்கள்.. ஐபிஎல் சியர் லீடரின் வேதனை புலம்பல்!

டெல்லி: சியர் லீடர் எனப்படும் உற்சாக அழகிகள் என்பது அமெரிக்காவில் ஒரு விளையாட்டு வடிவமாகவே உள்ளது. அந்த விளையாட்டு வடிவத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய பெருமை லலித் மோடிக்கே உண்டு. அவரது தலைமையில் நடந்த முதலாவது ஐபிஎல் தொடரின்போதுதான் இந்த சியர் லீடர்கள் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமானார்கள்.

தத்தமது அணியினர் ரன் குவிக்கும்போதும், அடித்து ஆடும்போதும் உற்சாகமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை சந்தோஷிக்க வைக்கிறார்கள் இந்த சியர் லீடர்கள். வெளியில் பார்த்தால் படு குதூகலமாக, எனர்ஜெடிக்காக இருக்கும் இவர்களுக்குள் பெரும் சோகமும், கவலையும், வேதனையும், வருத்தமும் தலைவிரித்தாடுகிறது என்பது சமீபத்தில் ஒரு ஐபிஎல் சியர் லீடரின் பேச்சிலிருந்து தெரிய வந்துள்ளது.

பெயர் குறிப்பிடாத அந்த சியர் லீடர், ரெட்டிட் தளத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்று கூறி கேள்விகளுக்குப் பதில் கொடுத்தருந்தார்.

அதில் அந்த பெண் கூறியிருந்ததிலிருந்து சில...

சீண்டத் துடிக்கும் ரசிகர்கள்

சீண்டத் துடிக்கும் ரசிகர்கள்

பெண்களைத் தொட நினைப்பதும், உரச நினைப்பதும் இந்தியாவில் பல ஆண்களுக்கு வக்கிரமான பொழுதுபோக்காகும். இந்த சியர் லீடர்களையும் ரசிகர்கள் தொடத் துடித்து போட்டி போடுவார்களாம். அதை தான் வெறுப்பதாக இந்தப் பெண் கூறியுள்ளார்.

பின்னால் இருந்து வரும் கமெண்டுகள்

பின்னால் இருந்து வரும் கமெண்டுகள்

சியர் லீடர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குப் பின்னால் உள்ள காலரியில், சியர் லீடர்களைப் பார்த்து ரசிகர்கள் அடிக்கும் கமெண்டுகளை காது கொடுத்துக் கேட்க முடியாதாம். ஆனாலும் சிரித்தபடி அதை சமாளிக்கிறார்களாம் இந்தப் பெண்கள்.

எல்லா இடத்திலும் இதேதான்

எல்லா இடத்திலும் இதேதான்

ஆனால் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் இந்தத் தொல்லை இருப்பதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இந்தியர்களை மொத்தமாக குற்றம் சாட்டவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தியர்கள் சற்று ஓவர்தான்

ஆனால் இந்தியர்கள் சற்று ஓவர்தான்

இவர் இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் சியர் லீடராக இருந்துள்ளாராம். இதில் மேற்கத்திய நாடுகளை விட இந்திய ரசிகர்கள்தான் சற்று ஜாஸ்தியாக சேட்டை செய்வதாக அவர் கூறுகிறார்.

உரித்துப் பார்க்கும் ரசிகர்கள்

உரித்துப் பார்க்கும் ரசிகர்கள்

பெரும்பாலான ரசிகர்கள் தங்களைப் பார்க்கும் பார்வையே தப்பாகத்தான் இருப்பதாக கூறும் அவர் அவர்களைத் தடுக்கவும் முடியாது என்பதால் முடிந்தவரை அவர்களை தாங்கள் பொருட்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளார்.

நோ செல்பி

நோ செல்பி

ஆண் ரசிகர்களுடன் தாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் மட்டுமே தாங்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

இந்தியப் பெண்களையும் சேர்க்கலாம்

இந்தியப் பெண்களையும் சேர்க்கலாம்

இந்தியப் பெண்களை ஏன் சியர் லீடர்களாக வைத்திருப்பதில்லை என்று கேட்டுள்ள அவர் இந்தியப் பெண்களையும் எங்களுடன் இணைந்து செயல்ட வைத்தால் பல பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

பேச முடியாது

பேச முடியாது

தாங்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து எங்குமே பேச முடியாது. பேசினால் காண்டிராக்டை ரத்து செய்து வேறு ஒரு வெள்ளைத் தோல் பெண் வந்து விடுவார் என்று கூறுகிறார் இவர்.

அது ஏன் அப்படி

அது ஏன் அப்படி

இன்னொரு கேள்விக்கு சியர் லீடர்களிலும் இனப் பாகுபாடு இருப்பதாக நான் உணர்கிறேன். அது ஏன் வெளிநாட்டு வெள்ளைத் தோல் பெண்கள் மட்டும்தான் கவர்ச்சிகரமாக டிரஸ் போட வேண்டுமா.. இந்தியப் பெண்கள் போடக் கூடாதா.. இதுகுறித்து எனது மேனேஜர்களிடம் கேட்டபோது அவர்களிடமும் பதில் இல்லைல என்றார்.

Story first published: Thursday, May 14, 2015, 18:14 [IST]
Other articles published on May 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+