Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதைவிட சிறப்பான உணர்வு இருக்க முடியாது... துள்ளி குதித்த முகமது ஷமி... காரணம் என்ன?

சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 3 தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது.

இதையொட்டி சிட்னியில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள இந்திய அணியினர் வலைபயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவிற்காக விளையாடுவதை போன்ற சிறப்பான உணர்வு இருக்க முடியாது என்று பந்து வீச்சாளர் முகமது ஷமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

27ம் தேதி துவக்கம்

27ம் தேதி துவக்கம்

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் வரும் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய அணியினர் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் வலைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முகமது ஷமி உற்சாகம்

முகமது ஷமி உற்சாகம்

இந்த பயிற்சிகளில், விராட் கோலி, சத்தீஸ்வர் புஜாரா, ஆர். அஸ்வின், டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். பந்துவீச்சாளர் முகமது ஷமியும் இரு தினங்களாக வலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாட்டிற்காக விளையாடுவது மிகவும் சிறப்பான உணர்வு என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஆவலுடன் காத்திருக்கும் ஷமி

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய அணியின் நெட் பயிற்சிகளில் பங்கேற்பதற்கான நீண்ட காத்திருப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆஸ்திரேலியா உடனான போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் வலைப்பயிற்சி செய்யும் வீடியோவையும் இணைத்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள் எடுத்த ஷமி

அதிக விக்கெட்டுகள் எடுத்த ஷமி

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது வீரராக முகமது ஷமி மிக முக்கியமான பங்கு வகித்தார். அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

17ம் தேதி டெஸ்ட் தொடர் துவக்கம்

17ம் தேதி டெஸ்ட் தொடர் துவக்கம்

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று தொடர்களிலும் ஷமி இடம்பெற்றுள்ளார். வரும் 27ம் தேதி ஒருநாள் தொடரும் தொடர்ந்து டி20 தொடர் மற்றும் அடுத்த மாதம் 17ம் தேதி டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 16, 2020, 11:24 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+