Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை பார்த்து கிண்டலாக சிரித்தார்கள்.. அஸ்வின் உருக்கம்.. சொந்த மண்ணில் திருப்பிக் கொடுத்த ஹீரோ!

சென்னை: ஒரு காலத்தில் என்னுடைய பவுலிங்கை பார்த்து பலர் சிரித்தார்கள் என்று அஸ்வின் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கி வருகிறார். நேற்று 5 விக்கெட் எடுத்த அஸ்வின் இன்று அரைசதம் கடந்தும் ஆடி வருகிறார்.

நேற்று 48 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார். இதன் மூலம் 266 விக்கெட் எடுத்து இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் 265 விக்கெட்டுகளை எடுத்த ஹர்பஜனின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.

எப்படி

எப்படி

இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். முதல் இடத்தில் 350 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே உள்ளார். இந்த நிலையில் தனது சாதனை குறித்து அஸ்வின் பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு இது சந்தோசம் தருகிறது.

தொடக்கமே

தொடக்கமே

தொடக்க காலத்தில் நான் ஹர்பஜன் போல பவுலிங் செய்ய முயற்சி செய்வேன். அப்போது என்னுடன் இருக்கும் சக வீரர்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள். என்னை கிண்டல் செய்வார்கள். ஹர்பஜனை போல பவுலிங் செய்ய நினைப்பேன்.

பவுலிங்

பவுலிங்

2001ல் நான் ஹர்பஜன் சென்னையில் ஆடி பார்த்து இருக்கிறேன். அப்போது நான் தமிழ்நாடு அணிக்காக ஆடிக்கொண்டு இருந்தேன். எனக்கு அப்போதெல்லாம் பவுலிங் செய்யும் எண்ணமே இல்லை.

கெத்து

கெத்து

ஆனால் இப்போது நான் பவுலராக மாறி உள்ளேன். இப்போது அவரின் சாதனையையே முறியடித்து இருக்கிறேன். எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இருந்தாலும் ஹர்பஜனிடம் இதற்காக சாரி கேட்டுக்கொள்கிறேன்., என்று அஸ்வின் சந்தோசமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

 அதிரடி

அதிரடி

நேற்று பவுலிங்கில் அஸ்வின் அதிரடி காட்டினார். இந்த நிலையில் இன்று பேட்டிங்கில் அஸ்வின் கலக்கி வருகிறார். அரைசதம் அடித்த நிலையில் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அஸ்வின் அதிரடியாக ஆடி வருகிறார்.

Story first published: Monday, February 15, 2021, 14:50 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+