கடைசியில பாண்டிங்கிட்டயே கைவரிசையை காட்டிட்டாங்களே!
மெல்போர்ன் : மெல்போர்னில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கடந்த வாரத்தில் அவரது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அவரது காரை திருடி சென்றுள்ளனர்.

ஆயினும் உடடினயாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது காரை மீட்டுள்ளனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவர் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் பார்க் செய்யப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் உடனடியாக செயல்பட்டு மெல்போர்னின் கேம்பர்வெல் பகுதியில் அவரது காரை மீட்டுள்ளனர். முன்னதாக அந்த காரை மிக வேகமாக இயக்கி சென்ற இரு கொள்ளையர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications