
மறக்க முடியாத தோல்வி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாதவகையில் மிகவும் மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. இதற்கும் மேலாக இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி, பௌலர் முகமது ஷமி உள்ளிட்டவர்கள் இருந்த நிலையில் மறக்க முடியாத இந்த தோல்வி இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

அணியில் இல்லாத கோலி, ஷமி
இந்நிலையில், இந்த போட்டியை அடுத்து கேப்டன் விராட் கோலி அடுத்த 3 போட்டிகளில் விளையாடாமல் நாடு திரும்புகிறார். இதேபோல தற்போது குவாரன்டைனில் உள்ள ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார். இதனிடையே முதல் போட்டியில் முகமது ஷமிக்கு வலது கையில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதால் அடுத்த போட்டிகளில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லாத அணி
மேலும் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் போன்ற பௌலர்களும் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஷாந்த் சர்மா தன்னுடைய பிட்னசை நிரூபித்துள்ள போதிலும் அவர் இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணியின் பௌலிங் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

விராட், ரோகித் இல்லாத 2வது போட்டி
மேலும் விராட் கோலி இல்லாததும் அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவும் குவாரன்டைனில் உள்ளதால் 3வது போட்டியில்தான் அவரால் பங்கேற்க முடியும். இந்நிலையில் வரும் 26ம் தேதி துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி சந்தேகத்திற்குரியதாகவே பார்க்கப்படுகிறது.

ரஹானே கேப்டன்
இந்த போட்டியில் கோலிக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே கேப்டன் பொறுப்பை வகிக்க உள்ளார். ஏற்கனவே இவர் இரண்டு முறை கேப்டன் பதவியை வகித்து, அதில் வெற்றி பெற்ற அனுபவம் உள்ளது. ஆயினும், ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணியை, அவர்களது சொந்த மண்ணில் சந்திப்பது அவருக்கு மிகவும் பெரிய சவாலாகவே உள்ளது.

அதிர்ச்சி தோல்வி
கடந்த 2018 -19 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் முக்கிய வீரர்கள் பலர் இருந்தனர். அந்த வெற்றியை இந்த தொடரில் இந்தியா தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பகலிரவு போட்டியின் தோல்வி அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











