
முதல் நிலை கிரிக்கெட்
உலகில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமடைந்து வரும் சூழலில், டெஸ்ட் போட்டிகளையும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்நிலை கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டிகளை குறித்து இன்று நாம் பலரும் பேசுகிறோம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாறு குறித்து யாருக்கும் தெரியாது.

உலகின் முதல் டெஸ்ட்
உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1877ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பெல்பேர்ன் நகரத்தில் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

போட்டியின் விவரம்
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 245 ரன்களை குவித்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய சார்லஸ் பேனர்மேன் 165 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம், உலகின் முதல் டெஸ்ட் சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். பின்னர், விளையாடிய இங்கிலாந்து அணி 196 ரன்களே எடுத்தது. 49 ரஙள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 108 ரன்களுக்கே சுருண்டது.

சுவாரஸ்யம்
இந்த போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. அதாவது 49 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார் ஜேம்ஸ்ட் சவுத்தர்டன். இன்று வரை உலகில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரராக இவரின் பெயரே உள்ளது.


Click it and Unblock the Notifications











