டோணி சொன்னதை கேட்டா ஒயிட்வாஷை தவிர்க்கலாம்
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்கில் நாளை துவங்குகிறது.
ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், இந்தத் தொடரில் ஒயிட்வாஷ் ஆகாமல் தவிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட்கள், 6 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, தொடரையும் இந்தியா இழந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நாளை துவங்குகிறது. முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோணி சொன்னதுபோல, பந்து வீச்சாளர்கள் கடந்த இரண்டு டெஸ்ட்களிலும், 20 விக்கெட்களை வீழ்த்தினர். பேட்ஸ்மேன்கள் தான் வெற்றியை உறுதி செய்திருக்க வேண்டும்.

தோல்வியடையாத இந்தியா
தென்னாப்பிரிக்காவில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம். அதே நேரத்தில் ஜோக்கனஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானம், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாகனது. அதைவிட, இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை தோற்றவில்லை. இந்த மைதானத்தில் மூன்று டெஸ்ட்களில் இந்தியா விளையாடியுள்ளது. அதில் 2 டிராவானது. ஒன்றில் இந்தியா வென்றது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது
தென்னாப்பிரிக்காவில் இந்தியா இதுவரை இரண்டு டெஸ்ட்களில் மட்டுமே வென்றுள்ளது. அதில் ஒன்று இங்கு நடந்துள்ளது. 2006ல் நடந்த டெஸ்டில் 123 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

ரிப்பீட்டு ஆகுமா கோஹ்லி ஆட்டம்
2013ல் இங்கு நடந்த டெஸ்டில், விராட் கோஹ்லி, 119 மற்றும் 96 ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் சத்தேஸ்வர் புஜாரா, 153 ரன்கள் எடுத்தார். அந்த டெஸ்டில் 458 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தென்னாப்பிரிக்கா, 7 விக்கெட் இழப்புக்கு, 450 ரன்கள் எடுத்து டிரா செய்தது.

தோல்வியை தவிர்க்க வாய்ப்பு
ஆக இந்த மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. அதே நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமானது. அதனால், முதல் இரண்டு டெஸ்ட்களைப் போல் இங்கு சொதப்பாமல், ஒயிட்வாஷ் தோல்வியில் இருந்து தப்பிக்க இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications