Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரிபட்டு வராத சிட்னி... மூணாவது டெஸ்ட் போட்டியில இந்தியா வெற்றிபெற மேலும் ஒரு காரணம்

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மூன்றாவது போட்டி சிட்னியில் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், சிட்னியில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது மெல்போர்னிலேயே 3வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஜன.7ல் 3வது டெஸ்ட்

ஜன.7ல் 3வது டெஸ்ட்

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 2வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

சிட்னியில் கொரோனா தாக்கம்

சிட்னியில் கொரோனா தாக்கம்

இதையடுத்து சிட்னியில் நடைபெறவிருந்த 3வது டெஸ்ட் போட்டி, மெல்போர்னிலேயே நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. சிட்னியில் கொரோனா தாக்கம் குறைவாகும் நிலையில், அங்கேயே 3வது டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தற்காலிக சிஇஓ நிக் ஹாக்லே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

அனைத்து தரப்பினரின் உடல்நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். சிட்னியின் கொரோனா நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்தியா வெற்றிக்கு மேலும் ஒரு காரணம்

இந்தியா வெற்றிக்கு மேலும் ஒரு காரணம்

இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலேயே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று ஹாக்லே தெரிவித்துள்ளார். 4வது போட்டி காப்பாவில் நடத்தப்படவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது அடுத்த போட்டியும் மெல்போர்னில் நடைபெறவுள்ளது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Story first published: Tuesday, December 29, 2020, 11:39 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+