Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியின் போது பொழுதுபோக்கு.. அம்பயர் திரையில் பாடல்களின் ப்ளே லிஸ்ட்.. சிக்கிக்கொண்ட 3வது நடுவர்!

ஜமைக்கா : டெஸ்ட் போட்டியின் போது, முக்கிய முடிவை எடுக்க வேண்டிய 3வது நடுவர், பாடல் கேட்டுக்கொண்டிருந்ததோடு, அதனை ஸ்கிரீனிலும் போட்டுக்காட்டியது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

டி20 தொடரில் சரிவர முடிவு எட்டப்படாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ம் தேதி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியும் பெற்றிருந்தது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங்

இந்த போட்டியுல் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஆலம் 56 ரன்களும், ஃபஹீம் அஷ்ரஃப் 44 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களும் அடித்தனர். இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான க்ரைக் பிராத்வெயிட் அபாரமாக ஆடி 97 ரன்களை குவித்தார். இதன் பின் வந்த ஹோல்டர் மட்டுமே அதிகபட்சமாக 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

 தொடர்ந்து சரிந்த விக்கெட்டுகள்

தொடர்ந்து சரிந்த விக்கெட்டுகள்

36 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, வெறும் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. இதனால் வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் கையில் இருந்தது. அப்போது சாதுர்யமாக செயல்பட்ட பந்துவீச்சாளர் ராச் மறுமுனை வீரர் ஸ்ட்ரைக்கு வராத வகையில் நிதானமாக பேட்டிங் செய்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கொடுத்தார். தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடைசி நேர ட்விஸ்ட்டால் மாறிப்போனது.

வேடிக்கை நிகழ்வு

வேடிக்கை நிகழ்வு

இவ்வளவு பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நடுவரும் ஒரு வேடிக்கை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது 77வது ஓவரில் பிராத் வெயிட் ரன் அவுட்டானார். சதமடிக்க 3 ரன்களே இருந்த போது 97 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். மிக முக்கியமான விக்கெட் என்பதால் இதற்கு கள நடுவர்கள், 3வது நடுவரின் முடிவுக்காக பரிந்துரைத்தனர். ஆனால் 3வது நடுவரோ, பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். ஆனால் அப்போது சரியாக விக்கெட்டை கவனித்து முடிவை அறிவித்தார். அவர் செய்த ஒரே தவறு, தான் பாடல் கேட்டுக்கொண்டிருப்பதை ரசிகர்களுக்கு காட்டியது தான்.

நடுவரின் தவறு

நடுவரின் தவறு

3வது நடுவரின் முடிவினை அறிவிப்பதற்காக மைதானத்தில் மிகப்பெரும் டிஜிட்டல் திரை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதில் அவுட்டா, நாட் அவுட்டா என்பதை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக தவறுதலாக தனது பாடல்களின் ப்ளே லிஸ்டை போட்டுவிட்டார். இதனால் மைதானத்தில் சில விநாடிகள் குழப்பம் ஏற்பட்டது. அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Wednesday, August 18, 2021, 18:30 [IST]
Other articles published on Aug 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+