Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செஞ்சதையே திருப்பி செஞ்ச இந்திய இளம் வீரர்..!! அசந்து போன கிரிக்கெட் உலகம்..!

Recommended Video

Thiruvananthapuram cricket stadium employees praised sanju samson

திருவனந்தபுரம்: தல தோனி செய்தது போன்றே, இளம் வீரர் சஞ்சு சாம்சன் செய்திருப்பதாக திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதான ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன். ஐபிஎல் போட்டிகளில் கலக்கியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்.

ஐபிஎல் இவரை வெளிச்சமிட்டு காட்டினாலும், இந்திய தேசிய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் இந்திய ஏ அணிக்காக சஞ்சு சாம்சன் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டியில் 7 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரி என 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அதிரடியை வெளிப்படுத்தியவர். தற்போது சஞ்சு சாம்சனை பாராட்டாத நபர்களே இல்லை என்று கூறலாம்.

மழையால் தாமதம்

மழையால் தாமதம்

அவர் செய்த ஒரு காரியம் தான், அப்படி பாராட்டுகளை குவிக்க காரணமாயிருக்கிறது. தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. போட்டி மழை காரணமாக தாமதமாக நடைபெற்றது.

ஊதியம்

ஊதியம்

ஆனாலும், போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் இந்த தொடர் முழுவதும் தான் பெற்ற சம்பளத்தை மைதான காப்பாளர்களுக்கு சஞ்சு சம்சன் வழங்கினார். அதற்கான காரணத்தையும் அவர் கூறினார்.

சீரானது நிலைமை

சீரானது நிலைமை

போட்டி மழையால் பாதிக்கப்பட்ட போதும் அதனை துரிதமாக செயல்பட்டு நிலைமையை சரி செய்த மைதான காப்பாளர்களுக்கு தன்னுடைய சம்பளப் பணம் முழுவதையும் அளிக்க உள்ளேன் என்று கூறி அவருடைய சம்பளத்தை மைதான அதிகாரிகளுக்கு சஞ்சு சம்சன் வழங்கினார்.

சிறப்பானது

சிறப்பானது

இது குறித்து மைதான அதிகாரிகள் கூறியதாவது: தோனிக்கு அடுத்து இது போன்று மென்மையான மனம், சஞ்சு சாம்சனிடம் இருப்பதை நாங்கள் தற்போது தெரிந்து கொண்டோம். அவரின் இந்த செயல் சிறப்பான ஒன்று.

சாதிக்க வாழ்த்து

சாதிக்க வாழ்த்து

மேலும் அவர் இந்திய அணியில் இணைந்து சாதிக்க வாழ்த்துகிறோம் என்றனர். தோனி சென்னை மைதான காப்பாளர்களுக்கு இதுபோன்று உதவிகளை செய்துள்ளார் என்பது நிறைய பேருக்கு தெரியாது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

Story first published: Tuesday, September 10, 2019, 12:25 [IST]
Other articles published on Sep 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+