வாவ்... நேற்று போட்டியைப் பாத்தீங்களே.. இந்த ஜோடியை பார்த்தீர்களா?
பிர்மிங்காம்: இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடியதைப் பார்த்த கோடானு கோடி கண்களில் பளீரென விழுந்து எழுந்தது இந்த ஜோடி.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பதை போர் போல மாற்றி விட்டார்கள் "தேசபக்தர்கள்". போட்டியில் யார் ஜெயித்தால் என்ன என்ற மன நிலை மாறி இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தையும் உள்ளே ஊடுறுவ விட்டு விட்டார்கள்.
இதேபோலத்தான் பாகிஸ்தானிலும். பாகிஸ்தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அங்கும் ஏகபோகமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் இந்த ஜோடி கண்ணில் பட்டது.

கண்ணில் பட்ட பளிச் ஜோடி
இந்த ஜோடிதான் நேற்று போட்டியை விட பெரிய ஸ்பாட்லைட்டாக மாறியது. இந்தப் படத்தில் இருக்கும் ஜோடி நேற்று பிர்மிங்காமில் நடந்த இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியைக் காண வந்த ஜோடியாகும்.

யாருங்க இது
இப்பெண் பாகிஸ்தானியப் பெண் போலத் தெரிகிறது. அவருடன் இருப்பவர் இந்தியர். இருவரும் தத்தமது தேசிய அணிகளை ஆதரித்து குரல் எழுப்பியபடி போட்டியை ரசித்தனர்.

யார் இந்த ஜோடி
இவர்கள் கணவன் மனைவியா, காதலர்களா அல்லது மைதானத்தில் சந்தித்து நட்பானவர்களா என தெரியவில்லை. நேற்று வீரர்களின் மோதலை விட இந்த இருவரின் நேசம்தான் அனைவரையும் கவர்ந்தது.

போருக்கு இது பரவாயில்லையே
இந்திய - பாகிஸ்தான் வீரர்களின் அனல் பறந்த ஆட்டம், ரசிகர்களின் கூக்குரல், வெறிக் கூச்சல் ஆகியவற்றையெல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆக்கி விட்டு இந்த ஜோடிதான் பலரது கண்களையும், மனதையும் கவர்ந்திழுத்தது.


Click it and Unblock the Notifications