Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா!

கேன்ட்டர்பரி : ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

Recommended Video

கொரோனாவை மனஉறுதியோட எதிர்கொள்வோம்... கோலி அட்வைஸ்

முதலில் ஆஸ்திரேலியாவில் மெதுவாக பரவி வந்தது இந்த வைரஸ். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் இருந்து வந்தது ஆஸ்திரேலிய அரசு.

கிரிக்கெட் போட்டிகளை கூட ரசிகர்கள் இல்லாமல் பாதுகாப்பாக நடத்தி விடலாம் என நம்பியது.

300 பேருக்கு கொரோனா

300 பேருக்கு கொரோனா

ஆனால், தற்போது அந்த நாட்டில் சுமார் 300 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி உள்ளது. ஐந்து பேர் இறந்துள்ளனர். மிகச் சிறிய நாடான ஆஸ்திரேலியாவில் இத்தனை பேருக்கு கொரோனா இருப்பது மோசமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

மிகப் பெரிய தாக்கம்

மிகப் பெரிய தாக்கம்

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. அதனுடன் ஒப்பிட்டால் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் இது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கி உள்ளது.

டாய்லெட் பேப்பர் சிக்கல்

டாய்லெட் பேப்பர் சிக்கல்

அங்கே முதலில் கொரோனா வைரஸ் பற்றி சமாளித்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. டாய்லெட் பேப்பர் உற்பத்தி பாதிப்பால் கிடைக்காது என மக்கள் வீட்டில் டாய்லெட் பேப்பரை வாங்கி குவித்து வந்தனர். மற்றபடி கொரோனா அச்சம் அங்கே முதலில் நிலவவில்லை.

சிக்கல் இல்லை

சிக்கல் இல்லை

கிரிக்கெட் தொடர்கள் கூட சிக்கல் இன்றி நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் துவங்க இருந்தது. அப்போது தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவத் துவங்கி இருந்தது. அதனால், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.

ரசிகர்கள் இல்லை

ரசிகர்கள் இல்லை

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் பங்கேற்றனர். ஒருமுறை ஆஸ்திரேலிய வீரர் சிக்ஸ் அடிக்க, பந்து பார்வையாளர் பகுதிக்கு இடையே சென்றது.

பீல்டர் நிலை

பீல்டர் நிலை

அங்கே ஆள் இல்லாததால் பந்தை யாரும் எடுத்துப் போட முடியாத நிலை. நியூசிலாந்து பீல்டர், நாற்காலிகளுக்கு இடையே நீண்ட நேரம் தேடி பந்தை எடுத்து வந்தார். இப்படி சில சிறிய சிக்கல்களுக்கு இடையே போட்டி நடந்து முடிந்தது.

ஆஸி வீரருக்கு கொரோனா அறிகுறி

ஆஸி வீரருக்கு கொரோனா அறிகுறி

ஆனால், இந்த போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக பரபரப்பு எழுந்து அவருக்கு சோதனைகள் நடந்தன. பின் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியான பின்னரே நிம்மதியானது.

லாக்கி பெர்குசன்

லாக்கி பெர்குசன்

அடுத்து நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. அதனால் மீண்டும் பரபரப்பு எழுந்தது. பின் அவருக்கும் பாதிப்பு இல்லை என உறுதியானது. இந்த நிலையில், ஒருநாள் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவும் வேகம்

கொரோனா பரவும் வேகம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கத் துவங்கியது. இந்த நிலையில் விழித்துக் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு, உள்ளூர் போட்டிகளையும் ரத்து செய்துள்ளது. ஷெப்பீல்டு ஷீல்டு என்ற உள்ளூர் டெஸ்ட் போட்டித் தொடர் சுமார் நூறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

வெற்றியாளர் இல்லை

வெற்றியாளர் இல்லை

அந்த தொடர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ரத்து செய்யப்பட்டு, வெற்றியாளர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் பின் மீண்டும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டு, வெற்றியாளர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பாதி தொடர் நடந்து இருப்பதால், அதிக புள்ளிகள் எடுத்துள்ள நியூ சவுத் வேல்ஸ் அணியை வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கலாமா என சிந்தித்து வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு.

Story first published: Sunday, March 15, 2020, 20:30 [IST]
Other articles published on Mar 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+