Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிடும் தோனியின் புதிய லுக்.. திட்டம் போட்டு முடி வளர்க்க சொன்ன ஹேர் ஸ்டைலிஸ்ட்

மும்பை : தோனியின் சமீபத்திய ஹேர்ஸ்டைல் உடன் கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

தோனி மீண்டும் நீளமாக முடி வளர்த்து வருகிறார் என்பதை அவரது ரசிகர்கள் அறிந்து இருக்கக் கூடும். அதன் பின்னணியில் இந்தியாவின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் இருப்பதும், அவர்தான் இந்த புதிய ஹேர்ஸ்டைலையும் வடிவமைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

This is how Dhoni and Aalim hakim brought the new look of Vintage Dhoni

தோனியின் ஹேர்ஸ்டைல் எப்போதுமே அனைவரையும் கவரும் வகையில் தான் இருக்கும். அவர் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆன போதே அவரது நீளமான தலைமுடிக்காகவே பெரிதும் பேசப்பட்டார்.

அவர் முதல் சதம் அடிக்கும் முன்னரே அவரது ஹேர்ஸ்டைல் காரணமாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆகி விட்டார். எனினும், கிரிக்கெட்டில் கேப்டனாகி ஒரு நிலையை எட்டிய பின் அவர் முடியின் நீளத்தை குறைத்துவிட்டார்.

ஆனாலும், இப்போதும் நீளமான தலைமுடி கொண்ட தோனியின் அந்த தோற்றத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அப்படி ஒரு ரசிகர் கடந்த 2023 ஐபிஎல் தொடரின் போது தோனியை நீளமான முடியுடன் இருப்பது போல வரைந்து அதை வெளியிட்டார்.

அதை கண்ட தோனி, அப்போது ஆலிம் ஹக்கீம்-இடம் காட்டி இருக்கிறார். அவரை அந்த வரைபடம் ஈர்த்துள்ளது. உடனே நாம் இதை உண்மையாகவே செய்து காட்டுவோம் என தோனியிடம் கூறிய அவர் நீளமாக முடியை வளர்க்குமாறு கூறி இருக்கிறார்.

This is how Dhoni and Aalim hakim brought the new look of Vintage Dhoni

இதில் தோனி - ஆலிம் ஹக்கீம் இருவரும் ஒரு திட்டம் தீட்டி இருக்கின்றனர். தோனியின் முடியை நீளமாக வளர விட வேண்டும். இருவருமே இடையே ஏதோ காரணத்தை சொல்லி முடியை வெட்டி விடக் கூடாது என்பது தான் அந்த திட்டம்.

அதன்படி, தோனி கடந்த ஆறு மாதமாக நீளமான முடியை வளர்த்து இருக்கிறார். தற்போது அந்த முடியுடன் ஆலிம் ஹக்கீம் அவருக்கு ஹேர்ஸ்டைல் செய்து அவரை அந்த வரைபடத்தில் இருந்தது போன்ற தோற்றத்துக்கு கொண்டு வந்து விட்டார்.
அது தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Story first published: Tuesday, October 3, 2023, 14:57 [IST]
Other articles published on Oct 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+