#Nesamani: ரத்தம் கொடுத்த ரொனால்டோ..குணமான நேசமணி.. இன்னைக்கு மேட்சில் விளையாடுவார் மக்களே!
Recommended Video
சென்னை: மருத்துவமனையில் குணமாகி இருக்கும் நேசமணி இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவர் என்று தகவல்கள் வருகிறதாம் மக்களே!
நேசமணி.. நேசமணி.. நெஞ்சம் நேசமணி.. என்று எங்கு சென்றாலும் நேசமணி மட்டும்தான் இருக்கிறார். சோஷியல் மீடியா முழுக்க கடந்த 24 மணி நேரத்தை நேசமணி மட்டும்தான் ஆண்டு கொண்டு உள்ளார்.
அந்த அளவிற்கு நேசமணி என்ன செய்தார் என்று பலர் கேட்கலாம். நேசமணி எதுவும் செய்யவில்லை.. நேசமணியைத்தான் செய்துவிட்டார்கள்.

என்ன பாஸ் நடந்தது
அணியே புடுங்க வேண்டாம் என்ற பிரண்ட்ஸ் பட வடிவேல் காமெடி பலருக்கும் நினைவில் இருக்கும். இதில் உள்ள வரிகள் எல்லாமே மிக மிக பிரபலமானது. இந்த நிலையில்தான் அந்த படத்தில் நேசமணியாக இருந்த வடிவேல், தலையில் சுத்தியலால் அடி வாங்கியது தற்போது பல வருடங்களுக்கு பின் மீண்டும் வைரலாகி உள்ளது.

சாதாரண கேள்வி
இன்ஜினியரிங் தொடர்பான பேஸ்புக் பக்கம் நேற்று அந்த போஸ்ட் போடப்பட்டது. சுத்தியல் படத்தை பகிர்ந்து, இதை உங்கள் மொழியில் எப்படி அழைப்பீர்கள் என்று ஒருவர் கேட்டு இருந்தார். அதற்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் பதில் அளித்து இருந்தனர். இந்த சாதாரண கேள்விக்கு பலர் சுவாரசியமான பதில்களை அளித்து இருந்தனர்.

அந்த ஒரு பதில்
அப்படித்தான் விக்னேஷ் பிரபாகர் என்ற நபர் அதில், பதில் அளித்து இருந்தார். அதில், இதன் பெயர்தான் சுத்தியல். நாம் இதை வைத்து அடிக்கும் போது டங் டங் என்று சத்தம் வரும். இதை வைத்து பெயிண்டிங் கான்டிராக்ட்ர் நேசமணியின் தலை உடை ஜெமினில் உடைக்கப்பட்டது. அவரது மருமகன்தான் தலையை உடைத்தது. பாவம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதான் பெரிய வைரலாகி உள்ளது.

நிறைய பேர்
இதையடுத்து #pray_for_neasamani என்ற டேக்கை உருவாக்கி அதில் பலர் டிவிட் செய்தனர். இதனால் தற்போது தேசிய அளவில் இந்த டேக் வைரலாகி உள்ளது. இதில் பலர் கலகலக்கலாக டிவிட் செய்து வருகிறார்கள்.
ஐயோ ரத்தம்
அப்போலோவில் இருக்கும் நேசமணிக்கு கால்பந்து வீரர் ரொனால்டோ ரத்தம் கொடுத்த அரிய புகைப்படம்.
மீண்டும் வருவார்
நேசமணி குணமாகிவிட்டார். அவர் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவார் என்று பலர் கூறியுள்ளனர்.
அடேய் கிருஷ்ணமூர்த்தி
நேசமான நேசமணியை விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்ற அதேவேளையில்... கிருஷ்ணமூர்த்தியை வன்மையாக கண்டிக்கிறோம்
இப்படித்தான் விழுந்தது
நேசமணி தலையில் இப்படித்தான் சுத்தியல் விழுந்தது.
என்ன ஒரு உருக்கம்
நேசமணியின் உருக்கமான வீடியோ.
அவர்களின் நிலைமை
மற்ற மாநில மக்களின் நிலைமை இப்போ இதுதான்!
சுடலை முத்து
நேசமணியின் தம்பி சுடலை முத்து துபாயில் பில்டிங் கான்டிராக்டராக இருக்கிறார். அவர் அப்போலோ வந்துள்ளார்!
அட இப்படியா
டிவிட்டர் இந்தியாவே டிவிட் போட்டுடுச்சு மக்களே!
யார் குற்றவாளி
இவர்தான் அந்த தேடப்படும் குற்றவாளி கிருஷ்ணமூர்த்தி!


Click it and Unblock the Notifications