சொன்னபடி மாற்றப்பட்ட ஜெர்சி..!! இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அணிவது இதை தான்..!!
Recommended Video
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி அணிய இருக்கும் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக கோப்பையில் இதுவரை தோற்காத ஒரே அணியாக வலம் வருகிறது இந்தியா. ஆடிய போட்டிகளில் ஒரு போட்டி ரத்து, மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி என 11 புள்ளிகளுடன்2ம் இடத்தில் இருக்கிறது இந்தியா.
அதனை அடுத்து ஜூன் 30ம் தேதி நடக்கவிருக்கும் லீக் போட்டியில் தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு முக்கிய மாற்றதை சந்திக்க உள்ளது. அதாவது அணியின் உடை முற்றிலும் மாறுகிறது.

இரு அணிகளும் நீலம்
வழக்கமாக இந்த இரு அணிகளுக்கும் போட்டிக்கான பிரதான உடை நீல நிறத்தில் இருக்கும். ஆனால் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி மோதும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க முடியாது. அதனால் ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடையில் களமிறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்சி தகவல்கள்
இங்கிலாந்து போட்டியை நடத்தும் அணி என்பதால் உடையை மாற்ற முடியாது. எனவே, இந்திய அணி தங்களது உடையில் மாற்றம் செய்து கொண்டுள்ளது. கடந்த பல நாட்களாகவே இது குறித்து தகவல்கள் வெளியாகி வந்தன.

வெளியான உடை
அதே நேரத்தில் பிரதானமாக, காவி நிறத்தில் இந்திய அணியின் ஜெர்சி வடிவமைக்கப் பட்டு இருப்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இறுதியாக இந்த உடை தான் என்று ஒரு உடை வெளியிடப்பட்டு இருக்கிறது.
காவி வண்ணம்
அணியின் கழுத்து பட்டை நீல நிறத்தில் உள்ளது. அதேபோன்று சட்டையின் முன் பக்கம், இந்திய அணியின் பெயருடன் நீல வண்ணமாக காட்சியளிக்கிறது. தோள் பட்டையிலும், கைகளிலும் காவி நிறமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சட்டையின் பின்புறம் முழுக்க, முழுக்க மஞ்சள் நிறமாக இருக்கிறது.
கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
இந்திய அணியின் உடையில் பிரதானமாக காவி நிறம் உள்ளது குறித்து முன்பே விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அணிக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கும் தொடர்பு உள்ளதா? இல்லை! பிரதமரின் வலியுறுத்தலின் பேரில் இது போன்ற புதிய நிறத்தை பிசிசிஐ அனுமதித்துள்ளதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


Click it and Unblock the Notifications