For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 289 ரன்களை அடித்துள்ளது. 7வது விக்கெட்டிற்கு முந்தைய பார்ட்னர்ஷிப்பில் ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 100 ரன்களை குவித்துள்ளனர்.

7வது விக்கெட்டிற்கு முந்தைய பார்ட்னர்ஷிப்பில் பிரிஸ்பேனில் இந்தியா அதிகமான ஸ்கோரை குவித்துள்ளது இதுவே முதல் முறை.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றியும் ஒரு டிராவும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் செய்துள்ளன. இந்நிலையில் இந்த போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.

இந்தியா 290 ரன்கள்

இந்தியா 290 ரன்கள்

இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை அடித்துள்ளனர். இந்நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 290 ரன்களை அடித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களும் ஷர்துல் தாக்கூர் 54 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது.

6 விக்கெட்டில் அதிக ரன்கள்

6 விக்கெட்டில் அதிக ரன்கள்

இந்நிலையில் பிரிஸ்பேனில் இதுவரை இந்திய அணி ஆடியுள்ள போட்டிகளில் 7வது விக்கெட்டிற்கு முந்தைய பார்ட்னர்ஷிப்பில் அதிகமான ரன்களை அடித்துள்ளது இதுவே முதல்முறை. இந்த பார்ட்னர்ஷிப் தொடரும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அல்லது டிரா செய்யும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர் அதிரடி

வாஷிங்டன் சுந்தர் அதிரடி

இந்த போட்டியின்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ள வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் தற்போது 50 ரன்களையும் குவித்துள்ளது மேலும் அதிகபட்ச ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

Story first published: Sunday, January 17, 2021, 11:43 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
Fifty on debut for Washington Sundar, playing in Gabba
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+