Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர்கள் வாயை மூடிக்கொண்டிருக்க காரணம் இதுதான்.. சேவாக்

மும்பை: ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் வழக்கமான பாணியான இந்திய வீரர்களுடன் வம்பு சண்டை இழுக்காததற்கு காரணம் லாபகரமான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலம்தான் காரணம் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அதுமட்டுமல்லாமல் மற்ற நாட்டு வீரர்களின் கோபத்தை தூண்டிவிடுவது போன்று வம்பிழுப்பதிலும் அவர்கள் வல்லவர்கள். இதை ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருந்த போது அதிகமாக நடந்த சம்பவமாகும்.

This is the main reason behing Australians keeping quiet? says Virender Sehwag

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் போட்டியில் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் வழக்கமான வாய் சண்டையை செய்ய வில்லை. எனினும் விராத் கோஹ்லிக்கும், கீப்பர் வேடுக்கும் இடையே லேசான சண்டை மட்டுமே நடந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லாபகரமான ஐபிஎல் போட்டிகளை கருத்தில் கொண்டே ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பு சண்டை இழுக்கவில்லை. இந்திய வீரர்களுடன் வம்புச் சண்டை வைத்துக் கொண்டால் அதை ஐபிஎல் உரிமையாளர்கள் பார்த்துவிட்டு இவர்களை ஏலம் எடுக்க யோசிப்பர்.

அதனால்தான் விராத் கோஹ்லியையோ அல்லது மற்ற வீரர்களையோ வம்புசண்டை இழுக்க அவர்கள் யோசித்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்கள் யாரும் இல்லை. ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பிஞ்ச் ஆகிய வீரர்களை மட்டும் அணி உள்ளது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, October 4, 2017, 19:00 [IST]
Other articles published on Oct 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+