தோனி..! உங்களுக்கு வயசாயிடுச்சு...! பேசாம ரிட்டயர்டு ஆயிடுங்க..! நீங்க இனிமே வேணாம்...!
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறும் தருணம் நெருங்கி விட்டது என்று முன்னாள் கேப்டன் தாதா சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் சாதனைகளில் தவிர்க்க முடியாத நபராகவும் இருப்பவர் தல தோனி. இங்கிலாந்து உலக கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உலக கோப்பையில் அவரது மந்தமான பேட்டிங், வயது ஆகியவற்றை காரணம் காட்டி கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதை எல்லாம் தோனி கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை..

ராணுவ பயிற்சி
2 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு கலக்கினார். அவரின் இந்த தற்காலிக விடுமுறை காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.

ஆரம்பித்த பிரச்சாரம்
இந்நிலையில் தற்போது ராணுவப் பணியில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார் தோனி. தென் ஆப்ரிக்கா தொடரில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீப காலமாக அமுங்கியிருந்த தோனியின் ஓய்வு பிரச்சாரம், இப்போது மெல்ல வலம் வர ஆரம்பித்திருக்கிறது.

புதிய வீரர்கள்
தற்போது அதனை ஆரம்பித்து வைத்திருப்பவர் தாதா கங்குலி. இது தோனி ஓய்வை அறிவிக்கும் நேரம் என்று முழங்கி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: இளைஞர்களுக்கு தோனி வழிகொடுக்க வேண்டிய நேரம் இது. அதை அவர் அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இளமை திரும்பாது
தோனிக்கு இளமை திரும்பவில்லை. ஓய்வு முடிவு என்பது கிரிக்கெட் வீரருக்கு ஒரு கட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு தான். 3 அல்லது 4 மாதங்கள் காத்திருந்தால், என்ன நடக்கிறது என்பது முழுமையாக புரிந்துவிடும். உண்மையில் அணி நிர்வாகிகளும், தேர்வுக் குழுவினரும் என்ன நினைக்கிறார்கள் என்பது அப்போது தான் தெரியும்.

காலம் பதில் சொல்லும்
இளம் வீரர் ரிஷப் பன்ட் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் என்ன நினைக்கின்றனர் என தெரிய வில்லை. காலம் அதற்கு விரைவில் பதில் சொல்லும் என்றார்.


Click it and Unblock the Notifications