For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பைக்கு துபாய், அபுதாபி ஓகே.. ஷார்ஜாவில் ஒரு போட்டி கூட இல்லையா?

துபாய் : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. அதில் துபாய், அபுதாபியில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன. ஷார்ஜாவில் எந்த போட்டியும் நடைபெறவில்லை.

இதற்கான காரணங்கள் சரிவர தெரியவில்லை. கவாஸ்கர் இது பற்றி பேசி உள்ளார். ஷார்ஜா பற்றிய தன் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கவாஸ்கரும், ஷார்ஜாவும்

கவாஸ்கரும், ஷார்ஜாவும்

முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தான் நடந்தது. அந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா வென்றது. அந்த இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் கவாஸ்கர் தான்.

ஷார்ஜாவில் கிரிக்கெட்

ஷார்ஜாவில் கிரிக்கெட்

முதன் முதலில் 80களில் தான் ஷார்ஜாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அப்போது கிரிக்கெட் வீரர்களுக்கான சிறப்பு நிதி வசூலிக்க அங்கே கிரிக்கெட் தொடர் நடந்தது. அப்போது முதல் ஷார்ஜாவில் கிரிக்கெட் பிரபலம் அடைந்தது.

அதிக போட்டிகள் நடத்திய மைதானம்

அதிக போட்டிகள் நடத்திய மைதானம்

உலகிலேயே அதிக கிரிக்கெட் போட்டிகள் நடத்திய மைதானம் ஷார்ஜா தான். புகழ்பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்கள் எல்லாம் பட்டியலில் ஷார்ஜாவுக்கு பின்னே தான் இருக்கின்றன. 80, 90களில் பல போட்டிகள் இங்கே நடைபெற்றுள்ளன.

ஷார்ஜாவில் போட்டிகள்

ஷார்ஜாவில் போட்டிகள்

இந்த முறை ஆசிய கோப்பையில், அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு நாட்டின் மற்ற இரண்டு மைதானங்களான துபாய் மற்றும் அபுதாபியில் தான் நடக்கின்றன. ஷார்ஜாவில் ஒரு போட்டி கூட நடைபெறவில்லை. இது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறி இருக்கிறார் கவாஸ்கர். இதற்கான காரணமும் சரிவர தெரியவில்லை.

Story first published: Saturday, September 15, 2018, 16:24 [IST]
Other articles published on Sep 15, 2018
English summary
This time no asia cup matches will be held at Sharjah stadium. Reason for the same is unknown.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X