2வது டெஸ்டில் அதற்கு வாய்ப்பே இல்லை... முற்றிலும் இது வேறு... முன்னாள் வீரரின் கணிப்பு
சென்னை: இன்று தொடங்கியுள்ள 2வது டெஸ்ட் போட்டி 5 நாட்களும் நடைபெறாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கொரோனோ கால முடக்கத்திற்கு பிறகு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இங்கிலாந்தை பழி தீர்க்க இந்திய வீரர்கள் முனைப்பு காட்டியுள்ளனர். இந்நிலையில் போட்டி முழுமையாக 5 நாட்களும் நடைபெறாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிட்ச்
முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சேப்பாக்கம் ஆடுகளம் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. முதல் 2 நாட்களில் பந்தில் டேர்னிங் இல்லை, ஆனால் அடுத்த 2 நாட்களில் அப்படியே மாறிபோனது. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் போனது.

2வது டெஸ்ட்
சென்னை ஆடுகளத்தை பார்த்த ஆகாஷ் சோப்ரா, 5 நாள் டெஸ்ட் போட்டி 3.5 முதல் 4 நாட்களில் முடிவடையும் எனக் கூறினார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதனால் டாஸ் வெல்வது இதில் முக்கிய பங்காக இருக்க முடியாது. இதனால் கண்டிப்பாக இப்போட்டி 3.5 முதல் 4 நாட்களில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

பந்தின் டேர்னிங்
2வது டெஸ்ட் குறித்து பேசியுள்ள இந்திய அணி துணை கேப்டன் ரஹானே, சென்னை ஆடுகளம் மிகவும் வித்தியாசமானதாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது முதல் நாள் முதலே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவும் எனவும் முதல் இன்னிங்சை பொறுத்து ஆட்டத்தை எடுத்து செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்
இந்தியாவில் சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் இன்று கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் இந்திய வீரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு தெம்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications