இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா?
Recommended Video
லண்டன்: இந்த முறை உலக கோப்பை இங்கிலாந்துக்கு தான் என்று அந்த அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் மார்தட்டியிருக்கிறார்.
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு இது 3வது தோல்வி என்பதால் அந்த அணி லேசாக கலக்கத்தில் இருக்கிறது.
முன்னதாக, ஏற்கெனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்றிருக்கிறது. எனவே இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி வேண்டும். அத்தகைய கட்டாயத்தில் அந்த அணி தற்போது இருக்கிறது.

நம்பிக்கையுடன் ஸ்டோக்ஸ்
இந்நிலையில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். சொந்த நாட்டில் நடப்பதால் இந்த முறை உலக கோப்பை எங்களுக்கு தான் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெரிய விஷயம் என்று தெரியும்
இந்த தொடர் எங்களுடையது. 4 ஆண்டுகளாக எங்கள் அணிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. உலக கோப்பை தொடர் என்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பது எங்களுக்கு தெரியும். அதேபோல ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டிற்கு உலக கோப்பையில் விளையாடுவது எனக்கு மிகவும்.

வெற்றிக்கு போராடுவோம்
இந்த தொடரில் சில போட்டிகளில் தோல்வி கிடைத்திருப்பது கஷ்டமாக தான் உள்ளது. எல்லோரும் தங்கள் அணியை வெற்றி பெற வேண்டும் என்று போராடுவார்கள், நானும் அப்படி தான் ஆடி வருகிறேன். ஆனாலும், வெற்றி கிடைக்க வில்லை.

திட்டம் வகுப்போம்
இன்னும் 2 போட்டிகள் வித்தியாசமான சூழ்நிலையில் காத்திருக்கின்றன. எனவே, சிறப்பாக விளையாடுவோம். அதற்கான திட்டத்தை வகுக்க இருக்கிறோம். போட்டியின் தன்மைக்கு ஏற்ப திட்டத்தில் சிறிய மாற்றம் செய்வோம்.

சாதனை இருக்கிறது
இங்கிலாந்தில் இந்தியாவிற்கு எதிராக அருமையான சாதனை வைத்துள்ளோம். ஆனாலும், இந்திய அணியை லேசாக எடை போட முடியாது. அவர்கள் தற்போது சிறந்த பார்மில் உள்ளனர் என்றார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக தோற்றப் போட்டிகளில் தான் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications