Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை மீண்டும் மைதானத்தில் பாக்கறதே மிகப்பெரிய சந்தோஷம்.. வீரேந்திர சேவாக் உற்சாகம்

துபாய் : கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்தார் தோனி.

This years IPL to be extra special and a major reason is MS Dhoni -Virender Sehwag

இந்நிலையில் தோனியை மீண்டும் மைதானத்தில பார்ப்பது மிகவும் சந்தோஷத்தை அளிக்கும் நிகழ்வு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஒரு ஆண்டாக விலகியிருந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த மாதத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக அவர் யூஏஇ சென்றுள்ளார்.

இந்நிலையில், தோனியை மீண்டும் மைதானத்தில் பார்ப்பது மிகவும் சிறப்பானது என்றும் அதனாலேயே இந்த ஆண்டு ஐபிஎல் மிகவும் சிறப்பாக அமையும் என்றும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் நம்முடைய இந்திய ரசிகர்களின் டிஎன்ஏவில் உள்ளதாகவும் அதனால் அவர்கள் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை காண காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Wednesday, September 16, 2020, 16:42 [IST]
Other articles published on Sep 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+