Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி… தோனி…!! சென்னை பயிற்சி ஆட்டம்… நிரம்பி வழிந்த சேப்பாக்கம்

சென்னை:சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விளையாடும் பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் மூன்று கேலரிகளும் நிரம்பி வழிந்தன.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Thousands arrive at chepauk as dhoni led csk play intra squad practice match

சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கிடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்கள் இலவசமாக பார்க்க சி,டி மற்றும் இ ஆகிய மூன்று கேலரிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

பயிற்சி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் குறைவாக வருவார்கள் என்று நினைத்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று கேலரிகளும் நிரம்பி வழிந்தன.

அதிலும் மைதானத்துக்கு தோனி வரும் போது கேட்கவே வேண்டாம். கூடியிருந்த தல ரசிகர்கள் அனைவரும் தோனி... தோனி என்ற உற்சாக குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

Story first published: Sunday, March 17, 2019, 22:20 [IST]
Other articles published on Mar 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+