Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி மனைவியின் கவர்ச்சி ஃபோட்டோ.. தெரிந்தே அப்படி செய்தாரா? - அதிகரிக்கும் பாலியல் மிரட்டல்

மும்பை: முகமது ஷமியின் மனைவி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்துக்கு, பின்னால் இருக்கும் காரணம் என்ன? பலரும் பல்வேறு விதமாக கருத்துக்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென கருத்து மோதல் ஏற்பட்டது. முகமது ஷமி மீது சூதாட்டபுகார், வரதட்சணை கொடுமை, வேறுபெண்களுடன் தொடர்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார் மனைவி ஹசின்.

இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்து, அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், ஷமி மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை விசாரணை செய்த பிசிசிஐ அவர் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனக் கூறி மீண்டும் அணியில் வாய்ப்பளித்தது.

அசத்திய ஷமி

அசத்திய ஷமி

அதன் பிறகு இரு குடும்பத்தாரும் பிரிந்துவிட்டனர். முகமது ஷமியும் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்த துவங்கிவிட்டார். மனைவியின் பிரச்சனையால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று பலரும் கூறிவந்த நிலையில், இன்று இந்திய அணியின் முன்னணி பவுலராக அசத்தி வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷமியின் பவுலிங் தான் பேசப்படும் வகையில் அமைந்தது.

கவர்ச்சி புகைப்படம்

கவர்ச்சி புகைப்படம்

அதேபோன்று ஹசின் ஜஹானும் மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இன்ஸ்ட்டாகிராமில் அவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்தவகையில், சமீபத்தில் கருப்பு நிற ஆடை ஒன்றை அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கவர்ச்சியான புகைப்படம் என்பதால், அவர் மத விதிமுறைகளை மீறி இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக, சமூக தளங்கள் வாயிலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, அவருக்கு கொலை மற்றும் பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையிலும் மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.

கவர்ச்சிக்கு நோ

கவர்ச்சிக்கு நோ

திருமணத்திற்கு முன்பிலிருந்தே ஹசினுக்கு மாடலிங் துறையில் பேரார்வம் இருந்து வந்துள்ளது. இந்த துறையில் பெரியளவுக்கு வளர வேண்டும் என்பதும் அவராக கனவாக இருந்துவந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு ஷமியுடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அதன் பிறகும் அவர் சில புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவேற்றம் செய்துகொண்டிருந்தார். இருவருக்குள்ளான விரிசலும் இதுவே ஆரம்பப் புள்ளி என்கின்றனர் சிலர். ஷமி குடும்பத்தில் இதுபோன்ற கவர்ச்சிக்கு முற்றிலும் நோ சொல்ல அதிலிருந்து தான் ஷமியை விட்டுப் பிரிய அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

ஆனால், அதன் பிறகு ஷமி மீது ஏன் சூதாட்ட புகார், பாகிஸ்தான் தரகர்களிடம் காசு வாங்கினார், வேறு பெண்களுடன் தொடர்பு என பல்வேறு புகார்களை அடுக்கினார் என்பது தான் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு, ஷமிக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். எது உண்மையோ? அவர்கள் இவருக்கே வெளிச்சம்.

Story first published: Monday, June 28, 2021, 12:32 [IST]
Other articles published on Jun 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+