Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டூ இன்டு டூ... டுட்டுடூ... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்த சிஎஸ்கே

சென்னை : ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் 4வது முறையாக இந்த சீசனில் கோப்பையை வெற்றிக் கொள்ள தயாராகி வருகிறது.

சிஎஸ்கேவின் பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில் முன்னதாகவே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் தங்களது பயிற்சியை துவங்கி ஆடி வருகின்றனர்.

முன்னதாகவே பயிற்சியில் ஈடுபட்டுவரும் எம்எஸ் தோனி, சிக்சர்களை விளாசி, அதகளம் செய்து வரும் நிலையில், தோனி மற்றும் ரெய்னா இணைந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.

23 தினங்களில் துவக்கம்

23 தினங்களில் துவக்கம்

13வது ஆண்டாக ஐபிஎல் 2020 சீசன் இந்த ஆண்டு வரும் 29ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடர் துவங்க இன்னும் 23 தினங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ள இந்த தொடரில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த வீரர்கள் பங்கேற்று ஆடவுள்ளனர்.

ஐபிஎல் நடைபெறுமா?

ஐபிஎல் நடைபெறுமா?

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆயினும், அதுகுறித்தெல்லாம் யோசிக்காமல் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

4வது கோப்பையை கைப்பற்ற தீவிரம்

4வது கோப்பையை கைப்பற்ற தீவிரம்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை சிறப்பாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது. வரும் 19ம் தேதி அந்த அணியின் பயிற்சி முகாம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்க உள்ளது. ஆனால் முன்னதாகவே அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளனர். இதுவரை 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள அந்த அணி 4வது முறையாக கோப்பையை கைகொள்ள தீவிரமாக உள்ளது.

தோனி, ரெய்னா புகைப்படம் வெளியீடு

தோனி, ரெய்னா புகைப்படம் வெளியீடு

டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுவரும் சிஎஸ்கே அணி, தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று ஆடிவரும் எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் புகைப்படங்களை அவர்கள் பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இதற்கு ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே நம்பர் விளையாட்டு

இந்நிலையில் 3ம் 7ம் சேர்ந்தால் நிறைவான 10 என்று கூறி, சுரேஷ் ரெய்னா மற்றும் எம்எஸ் தோனி இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிஎஸ்கே நம்பர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. ரெய்னா மற்றும் தோனியின் ஜெர்சி நம்பர்களை வைத்து இந்த கணக்கை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது சிஎஸ்கே.

முன்னதாக இவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்று டைரக்டர் விக்ரமன் படத்தின் பாடலை கேப்ஷனாக தெரிவித்திருந்தது.

சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் மோதல்

சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் மோதல்

இந்த ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் நாளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்த அணிகள் கடந்த தொடரின் இறுதிப்போட்டியிலும் மோதியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 6, 2020, 12:53 [IST]
Other articles published on Mar 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+