உயிருக்கே ஆபத்தான விஷயம்.. அடுத்தடுத்து வெளியேறிய 3 வீரர்கள்.இந்தியா - ஆஸி தொடரில் என்ன நடக்கிறது?
சிட்னி: ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய இரண்டு அணிகள் மோதி வரும் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து மூன்று முக்கியமான வீரர்கள் தலையில் காயம் அடைந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிளிப் ஹுக்ஸ் 2017ல் தலையில் பந்து பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார். வேகமாக வந்த பவுன்சர் பந்து இவர் தலையில் பட்டதில் காயம் அடைந்து இவர் மரணம் அடைந்தார்.
இவருக்கு ஏற்பட்ட concussion injuryதான் இந்த மரணத்திற்கு காரணம். அப்போதில் இருந்து எந்த வீரருக்கு concussion injury ஏற்பட்டாலும் அந்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, உடனடி ஸ்கேன் செய்யப்பட்டு கூடுதல் கவனம் அளிக்கப்படும்.

எப்படி
ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய இரண்டு அணிகள் மோதி வரும் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து மூன்று முக்கியமான வீரர்கள் தலையில் காயம் அடைந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி 20 போட்டியில் ஜடேஜா பாதியில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடிய ஜடேஜா தலையில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார்.

காயம்
இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் விதிப்படி மாற்று வீரராக சாஹல் களமிறங்கினார். வேகமாக வந்த பவுன்சர் பந்து இவர் தலையில் பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் போதே அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருக்கிறார் என்றாலும் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸி வீரர்
ஆஸ்திரேலிய அணி பெரிதும் நம்பி இருந்த இளம் வீரர் வில் புக்கோவ்ஸ்கி தற்போது அந்த அணியின் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் வில் புக்கோவ்ஸ்கி தலையில் அடிபட்டு பாதி போட்டியில் வெளியேறினார். இந்திய அணியின் இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்தில் இந்த சம்பவம் நடந்தது.

வெளியேறினார்
வேகமாக வந்த பந்து அப்படியே ஹெல்மெட்டில் மோதியது. பந்து பட்ட வேகத்தில் வில் புக்கோவ்ஸ்கி சுருண்டு விழுந்தார். இவரும் தற்போது ஆஸி தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் இன்று பும்ரா வீசிய பந்தில் தலை கலங்கி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்படி
கேமரூன் அடித்த பந்தை பும்ரா வேகமாக அடிக்க அந்த பந்து கேமரூன் கிரீன் தலை மீது சென்று வேகமாக பட்டது. பல கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து வேகமாக சென்று கேமரூன் கிரீன் தலையில் அடித்தது. இதில் கேமரூன் கிரீன் கலங்கி விழுந்து துடித்து போனார்.

நீக்கம்
இவரும் கூட தற்போது பயிற்சி ஆட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆஸி வீரர்களும் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான வீரர்கள் இப்படி வரிசையாக தலையில் காயம் பட்டு அவதிப்படுவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications