பாம்பை அடக்கிய படையப்பாவானார் கார்த்திக்!
டெல்லி: இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை முத்தரப்பு டி-20 போட்டியின் பைனல்ஸின் 18வது ஓவரில் வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அப்போது திடீரென வந்த தினேஷ் கார்த்திக், படையப்பாவாக மாறி, 8 பந்துகளில், 29 ரன்கள் எடுத்து பாம்பின் டான்ஸை அடக்கினார்.
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, நிதாஸ் கோப்பை முத்தரப்பு டி-20 போட்டி நடந்தது. இதில், நேற்று நடந்த பைனல்ஸில், இந்தியாவும், வங்கதேசமும் மோதின.
வெற்றிக்கு, 167 ரன்கள் தேவை என்ற நிலையில், இரண்டாவதாக ஆடிய இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, 56 ரன்களில் வெளியேறிய பிறகு, நம்பிக்கையே போய்விட்டது.

பாம்புக்கு ரெடியான பங்களா
18வது ஓவரில் விஜய் சங்கர், நான்கு பந்துகளில் எந்த ரன்னும் எடுக்காத நிலையில், நாமதான் ஜெயிக்க போறோம். பாம்பு டான்ஸ் ஆடுவதற்கு தயாராக வேண்டும் என்று வங்கதேச வீரர்கள் மனதில் குதூகலமாக இருந்தது.

அதிரடி சிக்சர்கள்
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் வந்தார். அந்த ஓவரில், இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் என, 22 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில், 12 ரன்கள் தேவை என்று இருந்தது. அது கடைசி பாலில், 5 ரன்கள் எடுத்தால் வெற்றி, பவுண்டரி போனால் டை ஆகும் நிலை இருந்தது.

8 பாலில் 29 ரன்கள்
கண்ணா, கடைசி பால் சிக்சர் பார்க்கிறியா என்று, தினேஷ் கார்த்திக் சிக்சர் அடிக்க, இந்தியா திரில் வெற்றி பெற்றது. 6, 4, 6, 0, 2, 4, 1, 6 என, 8 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக், 29 ரன்கள் எடுத்தார்.

அடங்கிய பாம்பு டான்ஸ்
பாம்பு டான்ஸ் ஆடுவதற்கு தயாராக இருந்த வங்கதேச வீரர்களை, தனது அதிரடி ஆட்டத்தால் அடக்கினார் தினேஷ் கார்த்திக்.


Click it and Unblock the Notifications