Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 'டபுள் கொட்டு'.. 'திரில்லரில்' வென்ற ராஜஸ்தான்!

அபுதாபி: ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக 2 முறை போட்டி டை ஆன புதிய வரலாறு நேற்று அபுதாபியில் படைக்கப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று அபுதாபியில் மோதின. இந்தப் போட்டி டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் தரப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதுவும் டை ஆனதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதையடுத்து அதிக பவுண்டரிகளை அடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

19வது போட்டி

19வது போட்டி

நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் களம் கண்டன. இது 19வது ஐபிஎல் போட்டியாகும்.

டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான்

டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான்

இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட் செய்தது. ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்தது.

முதல் முறையாக சிறப்பாக ஆடிய கம்பீர்

முதல் முறையாக சிறப்பாக ஆடிய கம்பீர்

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கம்பீர் முதல் நான்கு போட்டிகளி் சொதப்பியதால் கவனமாக ஆடி 44 பந்துகளில் 45 ரன்களை எடுத்து மானத்தைக் காப்பாற்றிக கொண்டார். மறுமுனையில் பிஸ்லா (3), காலிஸ் (13), மனிஷ் பாண்டே (19) ஆகியோர் அவுட்டாகிச் சென்றனர்.

கடைசி 2 ஓவரில் பரபரப்பு

கடைசி 2 ஓவரில் பரபரப்பு

இறுதியில் கடைசி 2 ஓவர்களில் 16 ரன்களே தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா வீரர்கள் சொதப்பி விட்டனர். 19-வது ஓவரை வீசிய ஜேம்ஸ் பால்க்னர் சூர்யகுமார் (31), உத்தப்பா (0), வினய்குமார் (0) ஆகியோரை காலி செய்ய நிலைமை பதட்டமானது.

அட 6 பந்தில் 12 ரன்னுதானே

அட 6 பந்தில் 12 ரன்னுதானே

கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஷகிப் அல்-ஹசனின் பவுண்டரியின் உதவியுடன் முதல் 5 பந்துகளில் கொல்கத்தா 9 ரன் எடுத்தது. கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது, 2 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் கொல்கத்தாவின் ஸ்கோரும் 8 விக்கெட்டுக்கு 152 ரன்களை அடைய போட்டி டை ஆனது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

இதையடுத்து சூப்பர் ஓவர் தரப்பட்டது. ஆளுக்கு ஒரு ஓவர் தரப்பட்டது. முதலில் ராஜஸ்தான் பந்து வீசியது. அதை எதிர்கொண்ட கொல்கத்தா 11 ரன்களை எடுத்தது. அதில் சூர்யகுமார் யாதவ், அல் ஹசன் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள்.

அதே 11

அதே 11

அடுத்து கொல்கத்தா பந்து வீசியது. அதை எதிர்கொண்ட ராஜஸ்தானும் 11 ரன்களை எடுக்கவே போட்டி செம பரபரப்பாகி விட்டது.

இதுவரை இல்லாத டை.. டை

இதுவரை இல்லாத டை.. டை

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை ஒரே போட்டி டை ஆனதில்லை. அந்த வகையில் நேற்று நடந்த போடடி சாதனை படைத்து விட்டது. அதேபோல நடப்புத் தொடரில் டை ஆன முதல் போட்டியும் இதுதான்.

சரி யார் எத்தனை பவுண்டரி

சரி யார் எத்தனை பவுண்டரி

சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனதால் பவுண்டரிகளைக் கணக்கு வைத்து வெற்றியைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தானுக்கே வெற்றி

ராஜஸ்தானுக்கே வெற்றி

அதைப் பார்த்ததபோது ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஃபோர், ஒரு சிக்ஸரை விளாசியிருந்தது. கொல்கத்தா அணி 12 ஃபோர் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசியிருந்தது. எனவே அதிக பவுண்டரிகளை எடுத்திருந்த ராஜஸ்தானே வெற்றி பெறுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Story first published: Wednesday, April 30, 2014, 8:37 [IST]
Other articles published on Apr 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+