
11 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்
நடந்து முடிந்த ஐபிஎல் 2020 தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய முகமது சிராஜ் ஒன்பது போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து அவர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார்.

நாடு திரும்பாத சிராஜ்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குவாரன்டைனில் ஈடுபட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டுவந்தார் சிராஜ். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் அவரது தந்தை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து அவர் இந்தியா திரும்ப பிசிசிஐ அனுமதி அளித்தது. ஆனால் அவரது முடிவு வேறாக இருந்தது.

விளையாட விருப்பம்
தான் இந்தியா திரும்ப மறுப்பு தெரிவித்துள்ள முகமது சிராஜ், தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு இந்திய அணி மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி பகிர்வு
இந்நிலையில், சிராஜ் அமர்ந்துள்ள நிலையில், அவரை சூழ்ந்து, விரித்தமான் சாஹா, சுப்மன் கில், ரிஷப் பந்த் மற்றும் முகமது ஷமி ஆகியோர் உட்கார்ந்திருக்கும்படியான புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் எந்த சூழலிலும் இணைந்திருப்போம் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications