Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீரியஸ் தோனியின் "திடீர்" ட்வீட்.. அதுக்கு நேரம் வந்துடுச்சு.. சர சரவென குவிந்த ரசிகர்கள்

மும்பை: தமிழகத்தின் "தல" தோனியின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதுவும், அவரது ஹியூமர் சென்ஸுக்காக.

மகேந்திர சிங் தோனி.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை. கடந்த ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்தார்.

இனி அவரை ப்ளூ ஜெர்ஸியில் பார்க்கவே முடியாது என்பதே அவரது வெறித்தன ரசிகர்களுக்கு வேதனையான விஷயம் தான்.

 ஜாலி நேரம்

ஜாலி நேரம்

ஆனால், தோனியோ அதைப் பற்றியெல்லாம் துளியும் அலட்டிக் கொள்வதில்லை. கிரிக்கெட்டுல உச்சத்துல இருந்த போதே, எதுக்கும் அலட்டிக்காத தோனி, ஓய்வுக்கு பிறகா கவலைப்படுவார்? முன்பிருந்ததை விட, மனுஷன் இப்போ ரொம்ப ஜாலியா, குடும்பத்தோட நேரம் செலவிட்டு வருகிறார். அதுவும், மகள் ஜிவா தான் தோனியின் டைம் பாஸ் இப்போது.

 ஐபிஎல்-லில் மட்டும்

ஐபிஎல்-லில் மட்டும்

மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருந்த போது, தனது குடும்பத்துடன் அவரால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. அதையெல்லாம் சேர்த்து வைத்து இப்போது என்ஜாய் செய்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் தோனி, வருடா வருடம் சீசனுக்கு வரும் வேடந்தாங்கல் பறவை போல, ஐபிஎல் தொடரின் போது மட்டும் வந்து கிரிக்கெட் விளையாடி சென்றுவிடுவார்.

 எப்போதாவது ட்வீட்

எப்போதாவது ட்வீட்

இப்போது, பெரிய மீசை வைத்துக் கொண்டு, குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கும் தோனி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறார். தினம் ஒரு ஃபோட்டோ வெளியாகி வருகிறது. அதை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். பொதுவாக, சமூக தளங்களில் நம்ம இன்னொரு "தல" அஜித் போல, கிரிக்கெட் "தல" தோனியும் ஆர்வமில்லாமல் இருப்பவர் தான். ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருக்கறாரே தவிர, ஒவ்வொரு மகாமகத்துக்கும் ஒரு ட்வீட் தான் போடுவார்.

 ஜாலி தோனி

ஜாலி தோனி

ஆனால், அவரது மனைவி சாக்ஷி அதற்கு நேர்மாறாக இருப்பவர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் படு பிஸியாக இருப்பவர். இப்படி சமூக தளங்களில் பிடிப்பே இல்லாத தோனி, பதிவிட்ட ட்வீட் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அந்த ட்வீட் அவர் 10 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2011ல் டீவீட்டியது. அதில், "இறுதியாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பு, அணி மீட்டிங், போட்டி நடுவர் சந்திப்பு ஆகியவை முடிந்துவிட்டது. அதனால் இனி என் மனைவி என் தலையை சாப்பிட வேண்டிய நேரம் என்று நினைக்கிறாள்" என்று சாக்ஷியை வாரிவிடும் விதமாக அவர் ட்வீட் செய்திருந்தார். இப்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. எப்போதும், சீரியஸாக இருக்கும் மனிதற்குள்ளேயும் எவ்வளவு ஜாலியான நபர் இருந்திருக்கிறார் பாருங்க.

Story first published: Tuesday, June 29, 2021, 15:09 [IST]
Other articles published on Jun 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+