கிரிக்கெட் ரசிகர்களே மறந்துவிடாதீங்க… சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
சென்னை:சென்னையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.
2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிக்கெட் விற்பனை
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

நாளை ஆரம்பம்
சேப்பாக்கம் விளையாட்டரங்கில் மார்ச் 23ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

11.30 மணி முதல் தொடக்கம்
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் பகல் 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட்களை வாங்கலாம். மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் விற்பனை நடைபெறும். பகல் 12.30 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2500 டிக்கெட்டுகள்
விளையாட்டரங்கில் சி, டி, ஈ பகுதிகளில் உள்ள கீழ்தளங்களுக்கான ரூ.1300 விலையுள்ள டிக்கெட்கள் 6வது வாயிலில் விற்கப்படும். மேல் தளங்களுக்கான ரூ.2500 விலையுள்ள டிக்கெட்டுகள் 3வது வாயிலிலும் விற்பனை செய்யப்படும்.

இணையதளத்தில் விற்பனை
சிறப்பு வகுப்புகளுக்கு ரூ.5000, 6500 விலையில் டிக்கெட்கள் விற்கப்படும். மேலும் இணையதளம் மூலமாகவும் டிக்கெட்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications