For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோதேரா ஸ்டேடியத்துல 3வது போட்டி... டிக்கெட் விற்பனை துவங்கிடுச்சுங்கோ!

அகமதாபாத் :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது.

பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த போட்டியில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கியுள்ளது.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் திட்டமிடப்பட்ட நிலையில் முதல் போட்டி நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது போட்டி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 3வது மற்றும் 4வது போட்டிகள் அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளன.

டிக்கெட்டுகள் விற்பனை

டிக்கெட்டுகள் விற்பனை

இந்த இரண்டு போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 3வது போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று முதல் துவங்கியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக மைதானத்தில் லைவ் போட்டிகளை காண முடியாத ரசிகர்கள் டிக்கெட்டை வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரூ. 300, 1000 டிக்கெட்டுகள்

ரூ. 300, 1000 டிக்கெட்டுகள்

கொரோனா காரணமாக மைதானத்தில் 50 சதவிகித ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் இந்த டிக்கெட்டுகள் முறையே 300 மற்றும் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த போட்டிக்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்க முடியும் என்பதால், தற்போது 50 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச போட்டி இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Story first published: Sunday, February 14, 2021, 14:32 [IST]
Other articles published on Feb 14, 2021
English summary
Tickets for the 3rd Test priced between Rs 300 and Rs 1000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+