Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 நாளைக்கு ஹவுஸ்புல்.. பந்தை கொடுக்க இராணுவ வீரர்கள்.. கொல்கத்தாவில் மாஸ் காட்ட ரெடியாகும் கங்குலி!

Recommended Video

IND VS BAN 2ND TEST | கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் தயார்

கொல்கத்தா : வங்க தேசத்துடன் இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22 முதல் 26ம் தேதிவரை பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்த போட்டிக்கான முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக இந்தியாவில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த பிங்க் பால் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியபோது அதை வாங்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 பகலிரவு ஆட்டம்

பகலிரவு ஆட்டம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசத்துடன் இந்திய அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22ம் தேதி துவங்கி 26ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

 பிங்க் பால் போட்டி

பிங்க் பால் போட்டி

கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்திருந்தார். மேலும் இந்த போட்டிகளில் பிங்க் பால்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

 மைதானத்திற்கு பந்துகள் வருகை

மைதானத்திற்கு பந்துகள் வருகை

இன்னும் சில தினங்களில் போட்டி நடைபெறவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்திற்கு பிங்க் பந்துகள் வந்துள்ளன. இவற்றின் தரம் குறித்த சர்ச்சை நிலவிவரும் நிலையில், இவற்றை நிபுணர்களின் உதவியுடன் சோதிக்கும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

இந்த போட்டி துவங்கப்படுவதற்கு முன்பாக பேண்ட் வாத்தியங்களுடன் தேசிய கீதம் ஒலிக்கப்பட உள்ளதாக பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் அவிஷேக் தால்மியா தெரிவித்துள்ளார்.

 கேப்டன்களிடம் பிங்க் பால் ஒப்படைப்பு

கேப்டன்களிடம் பிங்க் பால் ஒப்படைப்பு

இந்நிலையில் துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் கீழிறங்கி பிங்க் பால்களை இரண்டு அணிகளின் கேப்டன்களிடம் அளிக்கும்படியான நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தால்மியா தெரிவித்தார். ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

 மேற்குவங்க முதல்வர் பங்கேற்பு

மேற்குவங்க முதல்வர் பங்கேற்பு

இந்த போட்டியின் துவக்கவிழாவில் வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக் கொண்டு, ஈடன் பெல்லை அடித்து போட்டியை துவக்கி வைக்கவுள்ளதாகவும் தால்மியா தெரிவித்தார்.

Story first published: Sunday, November 17, 2019, 22:14 [IST]
Other articles published on Nov 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+