Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்ட்... ரசிகர்களுக்கு அனுமதி... நாளை முதல் டிக்கெட்டுகள் விற்பனை

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி முதல் சென்னையில் துவங்கி நடைபெறவுள்ளது.

Recommended Video

Ticket sale for 2nd Chennai Test to begin | Oneindia Tamil

இந்த போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துவங்கி 3வது நாளை கடந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா பாலோ ஆனை தவிர்க்கவே இன்னும் 100 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

13ம் தேதி துவக்கம்

13ம் தேதி துவக்கம்

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி சென்னையிலேயே நடைபெறவுள்ளது. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

டிக்கெட்டுகள் விற்பனை

டிக்கெட்டுகள் விற்பனை

வரும் 13ம் தேதி துவங்கி 17ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் 15,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100, 150 மற்றும் 200 ரூபாய் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் விற்பனை

நாளை முதல் விற்பனை

ஆனால் ஆன்லைனில் மட்டுமே இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை காலை 10 மணி முதல் டிக்கெட்டுகள் விற்பனை துவங்கவுள்ளது. பேடிஎம் ஆப் மூலம் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு ஆண்டாக மைதானத்தில் போட்டிகளை கண்டுகளிக்காத நிலையில் ரசிகர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்க அதிகமான ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, February 7, 2021, 21:27 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+