Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB IPL 2019:அனைவரும் சேப்பாக்கத்தை நோக்கி ! 4 அடுக்கு பாதுகாப்பு, 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

Recommended Video

IPL 2019: ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு- வீடியோ

சென்னை:முதல் ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் இன்று தொடங்க உள்ள நிலையில், கமாண்டோ படை உள்பட மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்புடன் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இன்று தொடங்குவது 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியாகும். ஆகவே, முக்கிய பிரபலங்கள், உயர் அதிகாரிகள் வருவார்கள்.

பாதுகாப்பு உறுதி

பாதுகாப்பு உறுதி

மேலும், இரு அணிகளிலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசாம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கமாண்டோ படை

கமாண்டோ படை

மைதானம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர் உள்பட மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 கண்காணிப்பு பணி

கண்காணிப்பு பணி

மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வீரர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 மோப்பநாய்கள், நிபுணர்கள்

மோப்பநாய்கள், நிபுணர்கள்

இதேபோல காவல்துறையினருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் பாதுகாப்பில் இறங்கியுள்ளனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.

Story first published: Saturday, March 23, 2019, 14:58 [IST]
Other articles published on Mar 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+