Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்த திலக் வர்மா.. தொடர்ந்து மூன்று டி20 செஞ்சுரி

ஹைதராபாத்: இந்திய வீரர் திலக் வர்மா தொடர்ந்து மூன்று டி20 சதங்களை அடித்து இமாலய சாதனையை படைத்து இருக்கிறார். சமீபத்தில் இந்திய டி20 அணியில் இடம் பெற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்து இருந்தார் திலக் வர்மா.

அடுத்து சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இடம் பெற்று ஆடினார். மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் தாண்டவம் ஆடிய திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார். தான் ஆடிய கடைசி மூன்று டி20 போட்டிகளில் தொடர்ந்து மூன்று சதங்களை அடித்து மிரட்டி இருக்கிறார் திலக் வர்மா. அந்த மூன்றில் இரண்டு சர்வதேச போட்டிகள் என்பது மேலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

tilak varma smat cricket

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. சர்வதேச கிரிக்கெட், டி20 லீக் தொடர்கள் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட எந்த வீரரும் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்தது இல்லை. அந்த வகையில், சரித்திர சாதனை படைத்து இருக்கிறார் திலக் வர்மா.

இதுவே டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரின் மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். மேலும், டி20 கிரிக்கெட்டில் 150 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் திலக் வர்மா படைத்து இருக்கிறார். இதன் மூலம், எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்தார்.

முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 147 ரன்கள் எடுத்ததே டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, மும்பை அணிக்காக ஆடிய ஸ்ரேயாஸ் சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் அந்த ஸ்கோரை எடுத்து இருந்தார்.

திலக் வர்மா இடது கை பேட்ஸ்மேனாக ஒரு சாதனையை செய்து இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இடது கை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தை சுரேஷ் ரெய்னா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் டி20 கிரிக்கெட்டில் நான்கு சதங்களை அடித்து இருக்கின்றனர்.

மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. தன்மய் அகர்வால் 23 பந்துகளில் 55 ரன்கள், ராகுல் புத்தி 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார். அவர் 14 ஃபோர் மற்றும் 10 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 225 ஆக இருந்தது.

Story first published: Saturday, November 23, 2024, 12:36 [IST]
Other articles published on Nov 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+