Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியிலேயே திலக் வர்மா சதம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

லீட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இட்டிருக்கிறது. இந்த சூழலில் மற்ற இந்திய அணி வீரர்கள் பல்வேறு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இளம் வீரரான திலக் வர்மா கமிட்டி கிரிக்கெட்டில் ஹாம்சீர் அணிக்காக விளையாடுகிறார்.

டி20 போட்டிகளில் ஏற்கனவே தன்னுடைய திறமையை திலக் வர்மா நிரூபித்துள்ள நிலையில் இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியிலும் இடம் பிடிக்க திலக் வர்மா போராடி வருகிறார். இந்த சூழலில் கவுண்டி கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் டெஸ்டில் அவர் அறிமுகமானார்.

Tilak Varma

ஈசக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாம்ப்சையர் அணி விளையாடியது. முதல் இன்னிங்சில் ஈசக்ஸ் அணி 296 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹாம்ப்சையர் அணியில் தொடக்க வீரர் அலி 9 ரன்களிலும், நிக் குபின்ஸ் டக்அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர்.

34 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து ஹாம்ப்சையர் அணி தடுமாறிய போது
களத்திற்கு திலக் வர்மா வந்தார். பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இந்த நெருக்கடிகளை அபாரமாக சமாளித்த திலக் வர்மா, நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார்.

மறுமுனையில் மிடில் டன் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். ஒரு கட்டத்தில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 241 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் முதல் போட்டியிலே சதம் அடித்து திலக் வர்மா, தன்னுடைய பெயரை நிரூபித்து இருக்கின்றார்.

ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் திலக் வர்மா ஏற்கனவே மூன்று சதம் அடித்திருக்கிறார். அதேபோன்று நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய அணி சார்பாக விளையாடி ஒரு சதமும் கடந்த ஆண்டு துலீப் கோப்பையிலும் ஒரு சதமும் திலக் வர்மா அடித்து இருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தான் அவர் சதம் சதமாக அடித்து வருகின்றார்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா 13 இன்னிங்ஸில் 343 ரன்கள் அடித்தார் இதில், இரண்டு அரை சதம் அடங்கும்..

Story first published: Tuesday, June 24, 2025, 16:35 [IST]
Other articles published on Jun 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+