Tilak Varma: முதல் 20 பந்துகளில் 17 ரன்கள்.. அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள்.. ஹர்திக் திட்டியதால் அதிரடி
அகமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மா முதல் ஐபிஎல் சதம் விளாசி தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி தந்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து 'ஆட்டநாயகன்' விருதை கைப்பற்றினார்.
ஆட்டத்திற்குப் பிறகு, இந்தச் சதம் தனிப்பட்ட முறையிலும், அணிக்கும் எந்த அளவுக்கு முக்கியம் என்பது குறித்து திலக் வப்மா பதில் அளித்தார். "நிச்சயமாக, முதல் சதம் எப்போதும் சிறப்பானது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இது எங்களுக்கு மிக முக்கியமானது. இங்கிருந்து எங்களுக்கு அதிக நேரம் இல்லை. ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியம்," என்றார்.

முந்தைய சில போட்டிகளில் அவர் திணறி வந்த நிலையில், இந்தப் போட்டியில் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுவதே தனது முதன்மை நோக்கம் என வர்மா ஒப்புக்கொண்டார். "கடந்த ஐந்து ஆட்டங்களில் நான் களத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. அதனால், இந்தப் போட்டியில் களத்தின் மையப்பகுதியில் முடிந்தளவு நேரம் செலவிட விரும்பினேன். முதல் 20 பந்துகளை கவனித்தால், நான் பந்து பந்தாகவே ஆடினேன்," என்று அவர் தன் திட்டத்தை விளக்கினார்.
இந்த எச்சரிக்கையான தொடக்கம், 20 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே அவருக்குப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு களத்தில் அதிரடி காட்டத் தொடங்கினார். அடுத்த 23 பந்துகளில் 82 ரன்களை அடித்து அசத்தினார். இது குறித்து பேசிய அவர், "பின்னர், நான் சில பந்துகளை எதிர்கொண்ட பிறகு, என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், நான் அதைத் துல்லியமாகச் செய்தேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று திலக் மேலும் குறிப்பிட்டார்.
"நான் சூழ்நிலையைக் கூர்ந்து கவனித்தேன், அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தேன். அந்த நேரத்தில், நிலைத்து நின்று ஆடி, எனது அடிப்படைகளை பின்பற்றினேன். என்னிடம் பல புதுமையான ஷாட்கள் உள்ளன. அணிக்குத் தேவைப்படும்போது பயன்படுத்த முடியும்," எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, "ஆனால், அழுத்தத்தின் கீழ் விளையாடுகையில், உங்கள் திறனை நம்புவது அவசியம். நான் அதைத்தான் செய்தேன், அது நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. நமன் அந்த நேரத்தில் நேர்மறையான எண்ணத்துடன் விளையாடிய விதம் எங்களுக்கு மிக முக்கியமானது. அவருக்குத்தான் பெருமை சேரும். அதற்குப் பிறகு நான் விளையாடிய விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று திலக் நன்றியுடன் கூறினார்.
ககிசோ ரபாடா, பவர் பிளேயில் மூன்று மும்பை பேட்டர்களை வீழ்த்தி ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார், இதனால் மும்பை ஒரு இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும், திலக் வர்மாவின் அபாரமான ஆட்டம், அணியை 199/5 என்ற வலுவான இலக்கிற்கு உயர்த்தியது. இந்த ரன் குவிப்பு இறுதியில் போதுமானதாக அமைந்தது.
பேட்ஸ்மேன்களின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.ஜஸ்பிரித் பும்ரா ஆரம்பத்தில் கணிசமான திருப்புமுனைகளை ஏற்படுத்த, அஷ்வனி குமார் மத்திய ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்கத்தை ஏற்படுத்தினார்.


Click it and Unblock the Notifications