IND vs WI 2nd T20- மீண்டும் காலை வாரிய ஸ்டார் வீரர்கள்.. அரைசதம் அடித்து அசத்திய திலக் வர்மா
கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 153 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாட முற்பட்டு ஏழு ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதன் பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகினார். தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதன்பிறகு இஷான் கிஷனும் இளம் வீரர் திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 27 ரன்களில் வெளியேற தனியாக நின்ற திலக் வருமா அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் ஐந்து பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 24 ரன்கள் சேர்த்தார்.
இதேபோன்று அக்சர் பட்டேலும் 14 ரன்களில் வெளியேற ரவி பிஸ்னாய் 8 ரன்களிலும் ஆர்ஸ்தீப் சிங் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 7 ரன்கள் எக்ஸ்ட்ராவுக்கு கொடுத்திருந்தார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை அன்சாரி ஜோசப், அகில் உசேன், ரோமேரியோ ஷிபர்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
153 என்பது இந்த மைதானத்தில் சவாலான இலக்காக தான் கருதப்படுகிறது.ஏனென்றால் ஆடுகளம் தோய்வாக இருப்பதால் பந்து பேட்டிற்கு வராது. எனினும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த இலக்கை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பந்து வீசினால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெற முடியும்.இந்திய அணி வீரர்கள் சூரியகுமார் யாதவ்,சஞ்சு சாம்சன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது பெரிய தலைவலியாக உள்ளது.


Click it and Unblock the Notifications