Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திலக் வர்மாவுக்கு ஆண்மை இழக்கும் அபாயம்.. உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

மும்பை: இந்திய இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, டெஸ்டிகுலர் காரணமாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் ஜனவரி 21 முதல் நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20ஐ-களில் அவர் பங்கேற்க மாட்டார்.

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ராஜ்கோட்டில் ஆடியபோது, திலக் வர்மாவுக்கு திடீரென கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, டெஸ்டிகுலர் டார்ஷன் கண்டறியப்பட்டது. ஜனவரி 21 அன்று நாக்பூரில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20ஐ-களின் முதல் மூன்று ஆட்டங்களை (ஜனவரி 21, ஜனவரி 25) அவர் தவறவிடுவார்.

Tilak Varma

அடுத்த மாத டி20 உலகக் கோப்பையில் திலக் வர்மா பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் பேசுகையில், "விஜய் ஹசாரே தொடரில் ஹைதராபாத் அணிக்காக ராஜ்கோட்டில் இருந்த திலக் வர்மாவுக்கு கடுமையான விதைப்பை வலி ஏற்பட்டது. அவர் கோகுல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் டெஸ்டிகுலர் டார்ஷன் என கண்டறியப்பட்டு உடனடி அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது," என்று விளக்கினார்.

பிசிசிஐ அதிகாரி மேலும், "எங்கள் நிபுணர்களிடம் கருத்து கேட்டோம், அவர்களும் அறுவை சிகிச்சையை ஒப்புக்கொண்டனர். திலக் வெற்றிகரமான அறுவை சிகிச்சையை முடித்து, தற்போது நலமாக இருக்கிறார்," எனத் தெரிவித்தார்.

டெஸ்டிகுலர் டார்ஷன் என்பது, விதைப்பைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை முடக்கும் ஏற்படும் அவசர மருத்துவ நிலை. இதனால் திடீர், கடுமையான வலி, வீக்கம், குமட்டல், வாந்தி ஏற்படும். இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க உடனடி அறுவை சிகிச்சை அவசியம்; தாமதமானால் நிரந்தர சேதம் அல்லது விதைப்பை அகற்றம் நேரிடலாம். இதனால் ஆண்மை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால், இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது பொதுவாக டீனேஜ் வயதினரிடம் காணப்பட்டாலும், எந்த வயதிலும் வரலாம். 'பெல் கிளாப்பர் டிபார்மிட்டி' என்ற பரம்பரை கோளாறுடன் இது பெரும்பாலும் தொடர்புடையது. காயம் அல்லது தூக்கத்தில் கூட இது ஏற்படலாம்.

Story first published: Friday, January 9, 2026, 15:48 [IST]
Other articles published on Jan 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+