Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் போட்டினாலே வெறி வந்துரும் போல.. சரியான நேரத்தில் அரைசதம் அடித்து காப்பாற்றிய திலக் வர்மா!

நிஷின்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய விளையாட்டு போட்டிகள் இறுதி ஆட்டத்தில் திலக் வர்மா 21 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார். இதன் மூலமாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை குவித்து அசத்தியது. மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில், கடைசி நேரத்தில் திலக் வர்மா அட்டகாசமான இன்னிங்ஸை ஆடினார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதிச்சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்களையும், திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்களையும் எடுத்து அசத்தினர்.

Tilak Varma

இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 21 ரன்களையும், இஷான் கிஷன் 18 பந்துகளில் 20 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணியால் 200 ரன்களையாவது எட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

சிவம் துபே - திலக் வர்மா கூட்டணி முதல் சில ஓவர்களை நிதானமாகவே ஆடியது. ஆனால் சிவம் துபே ஒரு ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து ஸ்ட்ரைக்கை திலக் வர்மாவிடம் கொடுத்தார். அங்கிருந்த ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திலக் வர்மா கையில் எடுத்துக் கொண்டார். கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 21 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 51 ரன்களை விளாசினார்.

நீண்ட நாட்களுக்கு பின் திலக் வர்மாவுக்கு சிறந்த ஆட்டமாக அமைந்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியமான நேரத்தில் துணைக் கேப்டன் பொறுப்பை உணர்ந்து பேட்டிங் ஆடியுள்ளார். ஏற்கனவே இப்படிதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் திலக் வர்மா அற்புதமான ஒரு இன்னிங்ஸை ஆடினார்.

தற்போது ஆசிய விளையாட்டு போட்ட்களின் இறுதியில் திலக் வர்மாவின் ஆட்டம் இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் வந்துள்ளது. திலக் வர்மா அழுத்தம் நிறைந்த நேரங்களில் சிறந்த ஆட்டத்தை விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 3, 2026, 11:52 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+