தோனி இல்லன்னா இந்திய அணியே இல்லை..! அவர் கிரிக்கெட்டின் ஜீனியஸ்.. இன்னும் நம்பிக்கை வச்சிருக்கேன்
Recommended Video
கேன்பரா: கிரிக்கெட்டின் ஜீனியஸ் தோனி, அவர் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் தோனியின் ரன் அவுட், மிகப் பெரிய திருப்புமுனை.
இதையடுத்து தோனி எப்போது ஓய்வை அறிவிப்பர் என்ற கேள்வி அனைவரையும் குடைந்து வருகிறது. தோனி ஓய்வை அறிவிக்க கூடாது என்று முன்னாள் வீரர்கள், பல பிரபலங்கள் கருத்துகள் கூறி வருகின்றனர். இதனிடையே ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் தோனி, அவர் இல்லாமல் இந்திய அணி ஒன்றுமே இல்லை என்று ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நம்பிக்கை உள்ளது
அவர் கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோனி ரன் அவுட் ஆகவில்லை என்றால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். அவர் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்காக பல போட்டிகளை வென்றவர்.

வாய்ப்பே இல்லை
தோனி இல்லையென்றால் இந்திய அணி பல போட்டிகளில் வென்றிருக்க வாய்ப்பே இல்லை. அதே நேரம் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நியூசிலாந்து எதிரான போட்டி போன்ற சூழலில் நீங்கள் இருக்கும்போது, தோனி இல்லாமல் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

அந்த ரன் அவுட்
உங்களால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2வது ரன் ஓடிவிட்டு வரும் போது தோனி கிரீசுக்கு சில இன்ச்சுகள் மட்டுமே பின்தங்கி இருந்தார். ஒருவேளை தோனி ரன் அவுட் ஆகாமல் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார்.

எதிர்பார்த்தேன்
ஒருநாள் போட்டியின்போது சேசிங்கில் வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். இதுவரை விளையாடியவர்களை காட்டிலும் தோனி சிறப்பாகவே விளையாடினார். 240 ரன்களை இந்தியா சேசிங் செய்துவிடும் என்று எதிர்பார்த்தேன்.

மிகுந்த வேதனை
ஆனால், ஹென்றி, போல்ட் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து விட்டனர். தோற்றதால், இந்திய அணியினர் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருப்பார்கள். கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் தான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications