Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான போட்டி: ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்! சங்ககாராவும் சாதனை!!

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கையின் தில்ஷன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதேபோல் இலங்கையின் சங்ககரா 14,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 32வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் விளையாடின.

Tillakaratne Dilshan hits six fours off a Mitchell Johnson over

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 376 ரன்களை குவித்தது. இதையடுத்து வெற்றிக்கு 377 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.

2வது ஓவரில் திரிமன்னே அவுட்டானா போதும் சங்ககாராவும், தில்ஷனும் அதிரடியாக விளையாடினர். ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வீசிய 6வது ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் தில்ஷன்.

இதேபோல் மற்றொரு இலங்கை வீரர் குமார சங்ககாரா 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். 14,000 ரன்களை கடந்த 2வது வீரர் சங்ககாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 8, 2015, 16:25 [IST]
Other articles published on Mar 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+