For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் லீக் டி20: இலங்கையின் 'சதர்ன்' அணிக்கு மலிங்கா டிமிக்கி..மும்பைக்காக விளையாடுகிறார்

By Veera Kumar

கொழும்பு: நாளை துவங்கும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி சார்பாக மலிங்கா மற்றும் தில்ஷன் ஆகியோர் விளையாடப்போவதில்லை என்பது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தீர்மானித்துள்ளது எரியும் கொள்ளியில் எண்ணையை வார்ப்பது போல அந்த அணி நிர்வாகத்திற்கு அமைந்துவிட்டது.

இரு வீரர்கள்

இரு வீரர்கள்

இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் விளையாட தேர்வாகியுள்ள அணிகளில் ஒன்றாகும். அந்த அணியில் பந்து வீச்சாளர் மலிங்கா மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் முக்கிய வீரர்களாகும்.

தில்ஷன் விலகல்

தில்ஷன் விலகல்

இதில் தில்ஷன் தனது அணிக்காக விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதை அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. தனிப்பட்ட காரணங்களால் அவர் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அணிக்கு டிமிக்கி

உள்ளூர் அணிக்கு டிமிக்கி

அதே நேரம் உள்ளூர் டி20 போட்டியில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியின் கேப்டனாக இருந்த லத்திஷ் மலிங்காவோ, அந்த அணியைவிட்டுவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட முன்வந்துள்ளார்.

மும்பை போதும்

மும்பை போதும்

மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே தனது நாட்டு அணிக்கு எதிராகவே பந்து வீசும் சூழ்நிலை மலிங்காவுக்கு.

Story first published: Friday, September 12, 2014, 12:54 [IST]
Other articles published on Sep 12, 2014
English summary
In a huge blow to Southern Express, representing Sri Lanka in the Champions League T20, their ace batsman Tillakaratne Dilshan has pulled out of the contest due to "personal reasons". Schedule "I have been informed today that Dilshan won't be participating in the CLT20 due to personal reasons. So that's all information we have got for now," said the manager of Southern Express, Shane Fernando at a press conference.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X