சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அதிரடி வீரர் தில்ஷன் ஓய்வு! ஆஸி. தொடருடன் குட்பை
கொழும்பு: 17 வருடமாக இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன் ஓய்வை அறிவித்துள்ளார்.
சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன.

இப்போட்டி தொடர் முடிவடைந்ததும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தில்ஷன் இன்று அறிவித்தார். 2013ல் இவர் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே தில்ஷன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றாக விடைபெற உள்ளார்.
- 1999ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் களம் கண்டார் தில்ஷன்.
- இதுவரை 87 டெஸ்ட், 329 ஒருநாள், 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
- ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இலங்கை வீரர்.
- டி20 போட்டிகளில் ஜெயவர்த்தனேக்கு அடுத்து சதம் அடித்த 2வது இலங்கை வீரர் தில்ஷன்.
- 2011ல் பல்லேகெலேயில் நடந்த டி20 போட்டியில் ஆஸி.க்கு எதிராக இந்த சதத்தை (104* ரன்கள்) விளாசினார்.
- கடந்த ஆண்டு தில்ஷன் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம். 25 போட்டிகளில் 1207 ரன்களை குவித்தார். இதில் 4 செஞ்சுரிகள் அடக்கம்.
- டில்ஸ்கூப் எனப்படும், தலைக்கு மேலே பந்தை தூக்கிவிடும் வித்தியாசமான ஷாட்டுக்காக பெயர் பெற்றவர் இவர்.
Story first published: Thursday, August 25, 2016, 16:14 [IST]
Other articles published on Aug 25, 2016


Click it and Unblock the Notifications